New Update
/indian-express-tamil/media/media_files/C6s8uNqMWbtGIHUtv3cq.jpg)
சிபிஎஸ்இ 10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
சி.பி.எஸ். இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
சி.பி.எஸ். இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சி.பி.எஸ். இ.10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நாடு முழுவதும் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. இதேபோல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 4 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு தேர்வும் காலை 10. 30 மணிக்கு தொடங்கி மடியம் 01.30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் இன்றி தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும்படி சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.
முதன் முறையாக தேர்வு தொடங்குவதற்கு 86 நாட்களுக்கு முன்னரே Date Sheet எனப்படும் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த முறை 23 நாட்களுக்கு முன்னரே தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஎஸ்இ தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
தேர்வுக்கு பள்ளிகள் தயாராகும்படி கேட்டுக் கொண்டுள்ள சிபிஎஸ்இ, கூடுதல் விபரங்களை cbse.gov.in என்ற தளத்தில் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.