கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் மாவட்ட காவல்துறையில் சமூக நலம் சார்ந்த, பொது மக்களின் ஒத்துழைப்புடன் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள 42 காவல் நிலையங்கள், 4 காவல் உட்கோட்ட முகாம்கள், சிசிடிவி கேமரா மூலம் இணைக்க உத்தரவிட்டார்.
Advertisment
இது புதன்கிழமை (டிச.28) மூலம் பயன்பாட்டுக்கு வந்தது. இது குறித்து சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் பொது மக்களிடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் கருத்துகளை கேட்டது. அப்போது, “அரசு துறைகளில் காவல்துறை தனிப்பட்ட முறையில் பொறுப்பு மிக்கதாக உள்ளது.
சட்டம் ஒழுங்கு, போக்குவரத்தை கண்காணித்து செயல்படுத்தும் காவல் துறையில் கடந்த காலங்களில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதையும் பார்த்துள்ளோம்” என்றனர். மேலும், காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்தின் அணுகுமுறை, நடவடிக்கைக்கு பாராட்டும் தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் இதேபோல் சிசிடிவி கண்காணிப்பு அவசியம் என்ற கருத்தையும் அவர்கள் முன்வைத்தனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/