கோவை கணுவாய் தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள், காட்டுபன்றிகள் நடமாற்றம் அதிகமாக உள்ளன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுத்தை நடமாட்டமும் தென்பட்டது.
கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகர், சோமையனூர் ஆகிய பகுதிகளில் சிறுத்தை ஆடுகளை தாக்கி சென்றது. இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிப்பதற்காக கடந்த இரு மாதங்களுக்கு முன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதனையடுத்து சில நாள்களாக சிறுத்தை தென்படாத நிலையில் தற்போது கணுவாய் அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் தென்பட்டு உள்ளது.
கணுவாய் அடுத்த சோமையம்பாளையம் யமுனா நகரில் அஸ்வின் என்பவரது கோழி பண்ணையில் இன்று அதிகாலை சுமார் 4:00 மணி அளவில் வந்த சிறுத்தை ஒன்று கோழி பண்ணையில் இருந்து கோழியை பிடித்து சென்று உள்ளது.
இது அங்கிருந்த சிசிடிவி”யில் பதிவாகியுள்ளது தற்பொழுது என்னை சிசிடிவ் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.
வனத்துறையினர் சிறுத்தையை விரைந்து பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/