/tamil-ie/media/media_files/uploads/2019/10/tiruchi-lallitha-jewellery-2.jpg)
Lalithaa Jewellery robbery CCTV Footages: Trichy lalithaa jewellery theft CCTV Footages Video Leaked- திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை வீடியோ
Lalithaa Jewellery Trichy Robbery CCTV Footages Leaked: திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் நடைபெற்ற கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. கொள்ளையர்கள் முயல் முகமூடி அணிந்துகொண்டு, ஒவ்வொரு நகையாக திருடுவது வீடியோவாக தெரிய வந்திருக்கிறது.
லலிதா ஜூவல்லரி, தமிழ்நாடு முழுவதும் பிரபலமான நகைக்கடை. முக்கிய நகரங்களில் இதற்கு கிளைகள் இருக்கின்றன. இந்தக் கடையின் உரிமையாளர் கிரண்குமார், அவராகவே டி.வி.யில் தோன்றி செய்யும் விளம்பரம் இந்தக் கடையை படு பேமஸாக்கியது. இதனால் வாடிக்கையாளர்களும் பெருகினர்.
லலிதா ஜூவல்லரியின் திருச்சி கிளை, அங்குள்ள சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கிறது. இந்தக் கடையில் கடந்த 1-ம் தேதி இரவு மர்ம ஆசாமிகள் புகுந்து சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை சுருட்டிச் சென்றனர். இது தொடர்பாக புதுக்கோட்டையில் 5 பேர் கைதானதாக செய்திகள் வந்தன. பின்னர் அவர்கள் குற்றவாளிகள் இல்லை என போலீஸ் அறிவித்தது. வட மாநில கொள்ளையர்கள் இதில் கைவரிசை காட்டியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-க்களில் பதிவான காட்சிகளை போலீஸார் கைப்பற்றினர். இந்தக் காட்சிகளை போலீஸார் ஓடவிட்டுப் பார்த்தனர். முயல் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கடையின் ‘ரேக்’கில் இருந்து ஒவ்வொரு நகையாக எடுத்துப் போடும் காட்சிகள் இதில் பதிவாகியிருக்கின்றன.
கொள்ளையர்கள் கீழே அமராமல் லாவகமாக திருடும் காட்சிகளை வைத்து, இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை என போலீஸார் அடிக்கும் கமெண்டும் இந்த லீக்கான சிசிடிவி காட்சிகளில் இடம் பெற்றிருக்கின்றன. கொள்ளை தொடர்பாக துப்பு துலக்க இந்தக் காட்சிகள் மட்டுமே முக்கிய துருப்புச் சீட்டாக போலீஸார் வசம் இருக்கின்றன.
விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் கூறுகின்றனர். போலீஸார் விசாரணை திருப்தி தருவதாக லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.