New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/23/covai-surya-fans-2025-07-23-18-35-24.jpg)
நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்திய கோவை ரசிகர்கள்!
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பில், அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவித்து பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்திய கோவை ரசிகர்கள்!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சூர்யா தனது 50-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனைமுன்னிட்டு, அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். கோவையில், கோவை தெற்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பில், அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவித்து பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஜூலை 23 அன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு சூர்யா நற்பணி இயக்கத்தினர் தங்க மோதிரங்களை பரிசளித்தனர். மேலும், குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு வகைகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மருத்துவ சிகிச்சைக்காக ஒருவருக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பகவதி, விஜய் ஆகியோர் கோணியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு, சூர்யா பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தனர். வடவள்ளியில் உள்ள பாரத அன்னை இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. கண் பார்வையற்ற 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களும் வழங்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் தொடர்ந்தன.
நடிகர் சூர்யாவின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சூர்யா நற்பணி இயக்கத்தின் இந்த சமூக சேவை நடவடிக்கைகள், அவரது ரசிகர்கள் மத்தியில் நற்பெயரையும், சமுதாயப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.