Advertisment

புதுச்சேரி மத்திய சிறைக்குள் செல்போன் பறிமுதல்: விளக்கம் கேட்ட ஐஜி

அலைவரிசையை அதிகப்படுத்துவதால் சிறைச்சாலையில் செல்போன் சிக்னல் கிடைக்கிறது. சிறையில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்த எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்து வருகிறோம்.

author-image
WebDesk
New Update
Cell phones were confiscated in Puducherry Central Jail

புதுச்சேரி மத்திய சிறையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுவை காலப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் செல்போன் அலைவரிசை கிடைக்காத அலைவரிசையை தடுக்கும் டவர் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிறையில் சிறை ஊழியர்கள் செல்போன் சிக்னலை பரிசோதனை செய்யும் போது அவ்வப்போது சிக்னல் வருவதாக புகார் தெரிவித்தனர்.

Advertisment

எனவே சிறைத்துறை ஐஜி ரவிதீப்சிங்சாகர், அனைத்து செல்போன் நிர்வாகத்தையும் காலாப்பட்டு மத்திய சிறைக்கு இன்று அழைத்து விளக்கம் கேட்டார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “சென்னை உயர்நீதிமன்றம், புதுவை அரசு சிறையில் செல்போன் அலைவரிசை கிடைக்காத வண்ணம் செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அலைவரிசையை அதிகப்படுத்துவதால் சிறைச்சாலையில் செல்போன் சிக்னல் கிடைக்கிறது. சிறையில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்த எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்து வருகிறோம்.

சிறை கண்காணிப்பாளர் கடந்த 15ந் தேதி சிறையில் பரிசோதனை செய்யும் போது இரு செல்போன்கள் கைப்பற்றப்பட்டு காலப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஒரு சில காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனங்கள் செல்போன் அலைவரிசை சிறையில் கிடைக்காத வண்ணம் உறுதிப்படுத்த வேண்டும். மறுபடியும் அலைவரிசை கிடைத்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment