பிரதமர் மோடியின் மீது மலர் தூவப்பட்டபோது, அவர் வந்த வாகனத்தின் மீது செல்போன் பறந்துவந்து விழுந்தது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் நடந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்கு முன்பாக பொதுகூட்ட மேடைக்கு வருவதற்கு திறந்த ஜீப்பில் பிரதமர் மோடி வந்தார். மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஊர்வலமாக வந்தனர்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், மலர் தூவி மோடியை வரவேற்றனர். மலர் தூவியபோது, கூட்டத்திலிருந்து செல்போன் மோடியின் வந்த வாகனத்தின் மீது விழுந்தது. இதனால் எல். முருகன் மற்றும் அண்ணாம்லை பதற்றமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி செல்போனை எடுத்து, பாதுகாவலரிடம் ஒப்படைத்தார். இதை யார் செய்தது என்ற விசாரணை நடைபெற்றபோது, தெரியாமல் வந்து விழுந்ததாக கூறப்பட்டது. இதனால் செல்போன் சம்பந்தபட்டவரிடம் ஒப்படைக்கப்பட்டது.