ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்க அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு மத்திய சட்டத்துறை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி மத்திய தலைவரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ஒற்றுமையாக இருந்த அ.தி.மு.க.,வை துண்டாக்கியவர் ஜெயக்குமார்; ஓ.பி.எஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றச்சாட்டு
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 16- ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிட்டு மத்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக ஜி20 மாநாட்டு ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது அவரிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற அங்கீகாரம் அவருக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil