Advertisment

Central Chennai Lok Sabha Results 2024: மத்திய சென்னையை மீண்டும் கைப்பற்றிய தயாநிதி மாறன்

2024 மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதி நிலவரம், அதன் வரலாறு கடந்த காலங்களில் கோலோச்சிய அரசியல் கட்சிகள் தொடர்பான பல்வேறு விவரங்களை இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Central Chennai Lok Sabha Election Results 2024 updates

2024 மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2024 மக்களவை தேர்தல் நாட்டில் 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்.19ஆம் தேதி தொடங்கியது. நிறைவுகட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடந்தது. இந்த 7 கட்டங்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன.

Advertisment

முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில், மத்திய சென்னை தொகுதியில் 25,581 வாக்கு வித்தியாசத்தில் தயாநிதி மாறன் முன்னிலை வகிக்கிறார். இரண்டாம் இடத்தில் பா.ஜ.கவின் வினோஜ் பி செல்வம் காணப்பட்டார். இந்நிலையில் தயாநிதி மாறன் தொகுதியை மீண்டும் கைப்பற்றினார்.

மத்திய சென்னை மக்களவை தொகுதி

தமிழ்நாட்டின் நான்காவது மக்களவை தொகுதி என்ற பெருமையை மத்திய சென்னை பெறுகிறது. இது இந்தியாவின் மிகச்சிறிய மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

பின்னர், சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதி, சென்னை மத்திய தொகுதியில் இணைக்கப்பட்டது. இந்த மக்களவைத் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக, வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை முறை செய்யப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்

  • வில்லிவாக்கம்
  • எழும்பூர் (தனி)
  • துறைமுகம்
  • சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி
  • ஆயிரம் விளக்கு
  • அண்ணா நகர்

இந்தத் தொகுதியில் அதிகப்பட்சமாக 61.49 சதவீதம் வரை வாக்குகள் 2009 மக்களவை தேர்தலில் பதிவாகின. 2019ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி 6,53,358 ஆண்களும், 6,62,925 பெண்களும் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் தவிர 320 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.

ஆண்டு வெற்றி பெற்றவர்கள் கட்சி
1977 பா. ராமச்சந்திரன் நிறுவன காங்கிரஸ்
1980  ஏ. கலாநிதி திமுக
1984  ஏ. கலாநிதி திமுக
1989 ரா. அன்பரசு காங்கிரஸ்
1991 ரா. அன்பரசு காங்கிரஸ்
1996 முரசொலி மாறன் திமுக
1998 முரசொலி மாறன் திமுக
1999 முரசொலி மாறன் திமுக
2004 தயாநிதி மாறன்  திமுக
2009 தயாநிதி மாறன்  திமுக
2014 எஸ்.ஆர். விஜயகுமார் அதிமுக
2019 தயாநிதி மாறன் திமுக

2024 மக்களவை தேர்தல் போட்டியாளர்கள்

2024 மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் 58.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது இந்தத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் வினோத் பி செல்வம், தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.பி. தயாநிதி மாறன், தே.மு.தி.க சார்பில் பார்த்த சாரதி, நாம் தமிழர் கட்சி தரப்பில் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் களத்தில் இருந்தனர்.

தயாநிதி மாறன் (தி.மு.க) 413848
வினோஜ் பி செல்வம் (பா.ஜ.க) 169159
பார்த்த சாரதி (தே.மு.தி.க) 72016
கார்த்திகேயன் (நாம் தமிழர்) 46031

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

chennai central Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment