அதிதீவிர இயற்கை பேரிடர் : கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் அம்மாநிலம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. வெள்ளம் இதுவரை 375 பேர் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. 19,500 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு முதலில் அறிவித்த ரூ 100 கோடி, பிரதமர் சுற்றுப்பயணத்தில் அறிவித்த ரூ 500 கோடி என மொத்தம் ரூ 600 கோடி உதவி அறிவித்திருக்கிறது.
கேரளா வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்டிருக்கும் சோகம் மொத்த இந்தியாவையும் உலுக்கியிருக்கிறது. மாநிலத்தில் சேதமாகியிருக்கும் 83,000 கி.மீ சாலைகளை சீரமைக்க மட்டுமே 13,000 கோடி ரூபாய் தேவை என மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார். நிவாரண முகாம்களை இரு மடங்காக அதிகரித்து மாநில அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இதுவரை பெய்து வந்த மழையின் அளவு சற்று குறைந்திருந்தாலும், வெள்ள நீர் வற்றுவதில் கடினம் ஈடுபட்டுள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் அதி தீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
முழு தகவலுக்கு இணைந்திருங்கள்...