மேகதாது அணை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் : காவிரி நதி நீர் பங்கீட்டிற்கே தமிழகமும், கர்நாடகமும் பல்வேறு ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இந்நிலையில் மிக சமீபத்தில் கர்நாடக மாநிலத்தின் குடிநீர் மற்றும் மின் உற்பத்தி போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய காவேரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்தது.
சாம்ராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகாலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது மேக தாது என்ற இடம். இங்கு இரண்டு தடுப்பணைகள் கட்ட வரைவு திட்டத்தை உருவாக்கியுள்ளது கர்நாடக அரசு.
மத்திய அரசு மேகதாது அணை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல்
மேகதாது என்ற இடத்தில் ரூ.5912 கோடி மதிப்பில் அமைய உள்ளது அந்த மேகதாது அணை. இந்த அணை காவிரியின் குறுக்கே அமைக்கப்பட்டால், தமிழர்களுக்கு கிடைக்கும் காவிரி நீரின் அளவு குறையும் என்ற காரணத்தால் இந்த அணை கட்டுவதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது தமிழக அரசு.
தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இயக்கத்தினரும் கூட இந்த மேகதாது கர்நாடகா அணை கட்ட தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர். இந்நிலையில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.