புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
காரைக்கால் நெடுங்காடு தொகுதி என்.ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
கடந்த 10-ஆம் தேதி இவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தனது தொகுதி பொதுமக்கள் மற்றும் துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் இவர் துறை செயல்பாடுகள் சரியில்லை என கூறி முதலமைச்சர் இவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அமைச்சர் நீக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/3f9adab0-13d.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“