ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஜூலை 15க்குள் வழிகாட்டு நெறிகள் - மத்திய அரசு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
online classes, central government about online classes, madras high court, மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகள், சென்னை ஐகோர்ட், மெட்ராஸ் ஐகோர்ட்

online classes, central government about online classes, madras high court, மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகள், சென்னை ஐகோர்ட், மெட்ராஸ் ஐகோர்ட்

ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஜூலை 15ஆம் தேதிக்குள் வழிகாட்டு நெறிகள் வெளியிடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.

ஆன் லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

Advertisment
Advertisements

அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி

இதேபோல, ஆன் லைன் வகுப்புக்களை மொபைல் மூலமும், லேப் டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஜே. ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார். ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்ட படி அரசு கண் மருத்துவமனை டீன் எந்த ஒரு அறிக்கையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டனர். அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன் வருகிற ஜூலை 15ஆம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்கு படுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட உள்ளதாக தெரிவித்தார். வழக்கு விசாரணை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.. அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Madras High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: