மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளை் ஊதியம் ரூ.17 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் அனைவருக்கும் வேலை வழக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாயப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் இருக்கும் மக்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில், வயதானவர்களம் ஊதியம் பெற வழி செய்கிறது. இந்த வேலை வாயப்பு திட்டத்தின் கீழ், ஊரில் உள்ள, ஏரி, குளம் சீரமைத்தல், ஆழப்படுத்துதல், கால்வாய் சீரமைப்பு, சாலை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு 100 நாட்கள் வழங்கப்படும் இந்த வேலை வாயப்பு திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ319 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வைத்து வருகின்றனர். மக்களின் கோரிக்கைளை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, 100 நாள் வேலை திட்டத்தில் தற்போது ரூ.17 வரை ஊதிய உயர்வு அறிவித்துள்ளது. இதன் மூலம் 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளைக்கான ஊதியம் ரூ319-ல் இருந்து ரூ336-ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கிராம மேம்பாட்டுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த ஊதிய உயர்வு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டுள்ளது. இந்த 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறைந்தபட்சம 2.33 சதவீதம் முதல் 7.48 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது, அதன்படி, ஒரு நாளைக்கான ஊதியத்தில் ரூ7 முதல் 26 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 5.33 சதவீதம் உயர்ந்து ரூ 17 அதிகரிகரித்துள்ளது.
அதேபோல், ஆந்திரா, அருணாச்சல பிரேதசம், அசாம், நாகலாந்து மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தலா ரூ 7 வரை ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தில் உயர்த்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் ஒரு நாளைக்கான ஊதியம் ரூ.400யை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.