சென்னை மெரினாவில் கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இடம், கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி தேவை. இந்த நிலையில், சென்னை, மெரினா கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் விரைவில் பணிகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நினைவுச்சின்னம் 3 பகுதிகளாக கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில், கருணாநிதி நினைவிடத்தில் இருந்து கடற்கரை வரை 220 மீட்டர் நீளம், 6 மீட்டர் உயரத்தில் காங்கிரீட் பாலம் கட்டப்படும் என்று திட்டமிட்டுள்ளது.
அடுத்து, காங்கிரீட் பாலம் முடியும் மணல் பரப்பில் இருந்து கடலுக்குள் சில மீட்டர் நீளத்தில் இரும்பு பாலம் அமைக்கப்படும்.
பேனா நினைவுச்சின்னம் 30 மீட்டர் உயரமும், 3 மீட்டர் விட்டமும் கொண்டதாக 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். நினைவுச்சின்னத்தை அணுகும் பாலம் 9 மீட்டர் அகலமும், கடல் பரப்பு மற்றும் மணல் பரப்பில் இருந்து 6 மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietam