Advertisment

தமிழக அரசு மருத்துவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் டெல்லி: இது ஸ்டாலினுக்கு தெரியுமா?

தமிழக அரசு மருத்துவர்களை மத்திய அரசு நேரடியாக தொடர்புகொள்ளக்கூடாது எங்கள் மாநில முதல்வரின் கீழ் இருக்கும் அமைச்சகத்துக்கு மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள். ஆனால், மத்தியில் இருந்து நேரடியாக தொடர்புகொள்வது முதலமைச்சரின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு செல்கிறார்களா என்று மருத்துவர் அனுரத்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
tamil nadu govt doctors, Doctor Anurathna, Doctor Anurathna raise new issue, தமிழக அரசு மருத்துவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் டெல்லி, தமிழக அரசு மருத்துவர்களை மத்திய அரசு தொடர்புகொள்வது ஸ்டாலினுக்கு தெரியுமா, central govt direct contact with tamil nadu govt doctors, CM MK Stalin, Tamilnadu

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசு மருத்துவர்களை நேரடியாக தொடர்புகொண்டு கருத்து கேட்பதாக மருத்துவர் அனுரத்னா தெரிவித்துள்ளார். தமிழக அரசு மருத்துவர்களை மத்திய அரசு இப்படி நேரடியாக தொடர்புகொள்ளக்கூடாது எங்கள் மாநில முதல்வரின் கீழ் இருக்கும் அமைச்சகத்துக்கு மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள். இப்படி தமிழக அரசு மருத்துவர்களை மத்தியில் இருந்து நேரடியாக தொடர்புகொள்வது முதலமைச்சரின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு செல்கிறார்களா என்று மருத்துவர் அனுரத்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இது குறித்து மருத்துவர் அனுரத்னா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “சிலமாதங்களுக்கு முன்பு எனக்கு டெல்லியில் இருந்து அறிமுகமில்லா எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

நமஸ்தே என்று ஆரம்பித்த அந்த குரல்,நான் பேசுவது பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் அனுரத்னாவிடமா என ஆங்கிலத்தில் கேட்டார்கள்.
ஆம் நீங்க யார் என்றேன்.

புதுதில்லியில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பதாக சொன்னார்கள்.

இந்தியில் பேசவா ஆங்கிலத்தில் பேசவா என்றார்கள்.எனக்கு ஆங்கிலம் மட்டுமே புரியும் என்றேன்.
சரி ஆங்கிலத்திலேயே பேசுவோம் என்று பேசத்தொடங்கியவர்கள் மருத்துவக்காப்பீடு குறித்து கேட்டார்கள்,நீங்க ஏன் உங்க மருத்துவமனையில் பிரதமமந்திரியின் விரிவான மருத்துவக்காப்பீடு மூலம் நோயாளிககுக்கு சிகிச்சை வழங்கவில்லை என்றார்கள்.
"நீங்க பேசுவது தமிழகத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் மருத்துவரிடம்,எங்களுக்கு எங்க மாநில முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது,தமிழகத்தில் உள்ள அனைவரும் இத்திட்டத்தில் பயனடைகிறார்கள்,அதனால் எனக்கு PMJAY என்கிற பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு தேவைப்படல"என்றேன்.

சரிங்க மேடம் பிரதமமந்திரியின் மருத்துவ காப்பீடு மூலம் உங்க மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்க என்ன செய்யலாம்,உங்களுக்கு ஏதேனும் idea இருக்கா என்றார்கள்.ரொம்ப எளிமையா தன்மையா பொறுமையா கேட்கிறார்கள்.

"நான் இருப்பது தமிழக ஆந்திர எல்லையில்,தமிழர்களை எங்க முதல்வர் பார்த்துக்குவார் எங்க மாநில காப்பீட்டு திட்டம் மூலம்,வேணும்னா பக்கத்தில் இருக்க ஆந்திராவில் இருந்து எனக்கு case அனுப்ப சொல்லுங்க,அவர்களுக்கு வேணும்னா பிரதம மந்திரியின் காப்பீடு திட்டம் பயன்கொடுக்கலாம் " என்றேன்.இதை சற்றே நக்கலாக தான் சொன்னேன்.

ஆனால் பேசியவரோ பொறுமையாக ஆந்திராவில் இருந்து உங்களுக்கு cases வர நான் என்ன செய்யவேண்டும் என்றார்.

"ஜெகன்மோகன் ரெட்டி கிட்ட தான் நீங்க பேசவேண்டும்" என்றேன்.

ரொம்ப valuable ஆன suggestions கொடுத்ததற்கு நன்றி,நாங்க இதுகுறித்து பரிசீலிப்போம் என்றார்.
எல்லா உரையாடலிலும் அவரிடம் மரியாதை,பொறுமை, எல்லாம் இருந்தது.ஆனால் எனக்கு தான் கோபம் மூக்கு மேலே இருந்தது,எங்க வந்து என்ன கேட்குறீங்க என.

ஆனால் அடுத்தடுத்து பார்க்கிறேன்,எதுனாலும் நேரிடையாகவே மத்திய அரசிடம்(சுகாதார துறை பிரிவு) இருந்து ஒரு மாநிலத்தின் கடைக்கோடியில் இருக்கும் எங்களை போன்றோருக்கு அழைப்பு வருது.
இன்று டயாலிசிஸ் zoom meeting நடந்தது ஒரு மூன்று மணிநேரம்.நான் எதிர்பார்த்தது என்னவோ தமிழக அதிகாரிகளை,ஆனால் national levelல zoom meeting நடந்தது இன்று.நாளையும் நடக்கும் இது.
அடுத்து இப்ப ஒரு அழைப்பு வந்தது,அதுவும் மத்திய அரசு அலுவலரிடம் இருந்து.

இப்படி எங்களுக்கு(மாநில root end officers) நேரிடையா அழைப்பு விடுப்பதும் எங்களை ஆய்வு செய்வதும் நம்ம முதல்வர் கவனத்திற்கு நம் அதிகாரிகள் கொண்டுசெல்கின்றனரா என தெரியல.

இது தவறான செயல்.மத்தியஅரசு நேரிடையாக எங்களை தொடர்புகொள்ள கூடாது,எங்க மாநில முதல்வரின் கீழ் இருக்கும் அமைச்சகத்துக்கு மட்டுமே நாங்க கட்டுப்பட்டவர்கள்.

தமிழக சுகாதார மற்றும் மருத்துவத்துறையும் மெல்ல மெல்ல மத்தியஅரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் போகிறது என்பதை உணர்கிறேன்.

மாநில சுயாட்சி பறிபோக கூடாது என்பதே என் ஆசை.” என்று மருத்துவர் அனுரத்னா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசு மருத்துவர்களை டெல்லியில் இருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து நேரடியாக தொடர்புகொள்கிறார்கள். அவர்கள் மாநில அரசின் அதிகாரிகள் மூலமே தொடர்புகொள்ள வேண்டும். இது தவறான செயல் என்று கூறியுள்ள மருத்துவர் அனுரத்னா, இப்படி எங்களுக்கு (மாநில root end officers) நேரிடையா அழைப்பு விடுப்பதும் எங்களை ஆய்வு செய்வதும் நம்ம முதல்வர் கவனத்திற்கு நம் அதிகாரிகள் கொண்டுசெல்கின்றனரா என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழக சுகாதார மற்றும் மருத்துவத்துறையும் மெல்ல மெல்ல மத்தியஅரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் போகிறது என்பதை உணர்கிறேன் என்று மருத்துவர் அனுரத்னா கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment