தமிழக அரசு குறித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக எம்.பிக்கள் நாகரீகமற்றவர்கள் கூறியிருந்தார். இதற்கு கடுமையான கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து, தனது பேச்சை திரும்ப பெற்றுள்கொள்வதாக தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவதில், தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டும் தான். மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தற்போது உள்ள இருமொழி கொள்கை தான் தமிழ்நாட்டின் கொள்கை என்று கூறி மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மும்மொழி கொள்கை அமல்படுத்தவில்லை என்றால், கல்வி நிதி விடுவிக்கப்படமாட்டாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அவரின் பேச்சுக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று தொடங்கிய நடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில், தி.மு.க தி.மு.க. எம்.பிக்கள் நாகரீகமற்றவர்கள் என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பேச்சின்போது, புதிய கல்வி கொள்கை குறித்து தமிழகத்திற்கு சரியான புரிதல் இல்லை. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர்வததக தமிழ்நாடு அரசு கூறிய நிலையில், திடீரென தனது நிலைபாட்டை மாற்றியது ஏன்? தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வந்தபோது, முதல்வர் அதனை தடுத்துவிட்டார். தமிழ்நாடு மாணவர்களின் நலனை அரசு வஞ்சிக்கிறது. திமுக எம்.பிக்கள் அநாகரீகமானவர்கள், ஜனநாயகம் அற்றவர்கள். மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல், அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தி,மு.க அரசு மக்களிடம் நேர்மையாக இல்லை என்று கூறியிருந்தார்.
இது குறித்து, பேசியுள்ள தி.மு.க. எம்.பி கனிமொழி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதிலில் தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் என்று குறிப்பிட்டது வேதனை அளிக்கிறது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதியை விடுவிப்பது தொடர்பாக தான் கல்வி அமைச்சரை தமிழக எம்பிக்கள் உடன் சந்தித்தேன். புதிய தேசிய கல்வி கொள்கையில் சில பிரச்சினைகள் இருக்கிறது, அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என தெளிவாக கூறினோம். மும்மொழி கொள்கை ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல, புதிய தேசிய கல்வி கொள்கையை முழுமையாக ஏற்று கொள்ள முடியாது என தெளிவாக கூறினோம். ஆனால் இதற்கு தர்மேந்திர பிரதான் பதில் வேதனை அளிக்கிறது அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இதனிடையே தனது பேச்சுக்கு வருத்தம்தெரிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நான் பேசியது யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அதனை நான் திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், கனிமொழியின் உரைக்கு பதில் அளித்த அவர், பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக அவர்கள் என்னோடு பல முறை பேசி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொண்டார்கள். தமிழக முதல்வரும் ஒப்புக்கொண்டார். பிறகு அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்கள்.
தற்போதும் சொல்கிறேன். இந்தநிதி ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. பாஜக அல்லாத மாநிலங்களோடு எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கர்நாடகா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் என அனைத்து மாநிலங்களும் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதியை பெற்று வருகிறார்கள். தமிழ்நாடும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக ஒப்புக்கொண்டால், அவர்களுக்கும் நிதி வழங்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.