தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எனப்படும் டான்ஜெட்கோ தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என இரண்டாக பிரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி செய்து அதனை பல மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பணியை தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ (TANGEDCO) செய்து வருகிறது. இந்த டான்ஜெட்கோ-வை இரண்டாக பிரிந்து செயல்பட்டுத்துவதற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு தற்போது டான்ஜெட்கோ-வை இரண்டாக பிரிக்க அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, இதுவரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என்று இருந்தது இனி, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என இரண்டு பிரிவாக செயல்பட உள்ளது. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் என்பது, நிலக்கரி, டீசல், அணு மற்றும் வேறு பல எரிபொருட்களை பயன்படுத்தி மின் உற்பத்தியை செய்வதாககும். அதேபோல், காற்று, கடல் அலை, சூரிய ஒளி, உயிரி எரிபொருள் ஆகியவற்றை பயன்படுத்தி பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்வதை குறிக்கும்.
டான்ஜெட்கோவை இரண்டாக பிரிக்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, நிர்வாக ரீதியாக துறையை இரண்டாக பிரித்தாலும், மக்களுக்கான மின் விநியோகம் மற்றும் மின் உற்பத்தியில் எவ்வித இடர்பாடுகளும் இருக்க கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளது. இதனையடுத்து விரைவில் டான்ஜெட்கோ இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“