பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி உறுதி; 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் இருக்கும் - அமித்ஷா

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க உடன் தேர்தல் கூட்டணியை உறுதி செய்தார். மறுபுறம் தமிழக பா.ஜ.க நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகிறார்

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க உடன் தேர்தல் கூட்டணியை உறுதி செய்தார். மறுபுறம் தமிழக பா.ஜ.க நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
amitshah eps annamalai

அமித் ஷா சென்னை வருகை: இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Advertisment

சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி, பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Apr 11, 2025 19:23 IST

    திசைதிருப்பும் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தி.மு.க.,விற்கு இல்லை - கனிமொழி

    திசைதிருப்பும் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தி.மு.க.,விற்கு இல்லை. இந்தியை திணித்ததை தவிர பா.ஜ.க என்ன செய்தது? காசி தமிழ் சங்கமத்தால் தமிழ் வளர்ந்ததா? என தி.மு.க எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்



  • Apr 11, 2025 18:46 IST

    பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் -திருமாவளவன்

    பா.ஜ.க கொடுத்த நெருக்கடிக்கு பணிந்து கூட்டணி வைத்துள்ளது அ.தி.மு.க.. இதனை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்



  • Advertisment
    Advertisements
  • Apr 11, 2025 18:21 IST

    இ.பி.எஸ் இல்லத்தில் தேநீர் விருந்து; அண்ணாமலை உடன் செல்லும் அமித்ஷா

    மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை கிண்டியில் இருந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு புறப்பட்டார். அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உறுதியான நிலையில், இ.பி.எஸ் வீட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது. தேநீர் விருந்தில் பா.ஜ.க சார்பில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், கரு.நாகராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர்



  • Apr 11, 2025 17:55 IST

    பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி உறுதி; அமித்ஷாவுக்கு இ.பி.எஸ் வீட்டில் தேநீர் விருந்து

    பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி உறுதியானதையொட்டி அமித்ஷாவுக்கு இ.பி.எஸ் வீட்டில் தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது. அமித்ஷா வருகையையொட்டி, இ.பி.எஸ் இல்லத்தில் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



  • Apr 11, 2025 17:52 IST

    எடப்பாடி பழனிசாமியால்தான் அண்ணாமலை மாற்றமா? என்ற கேள்விக்கு அமித்ஷா பதில்

    எடப்பாடி பழனிசாமியால்தான் அண்ணாமலை மாற்றமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித்ஷா, “அண்ணாமலை மாற்றப்பட்ட பிறகே அ.தி.மு.க கூட்டணிக்கு வந்ததாக கூறுவதில் உண்மை இல்லை. இப்போதும் மாநிலத் தலைவராகவே என் அருகில் உட்கார்ந்திருக்கிறார்” என்று கூறினார்.



  • Apr 11, 2025 17:49 IST

    வேற்றுமை இருந்தாலும் ஆலோசித்து முடிவெடுப்போம் - அமித்ஷா

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா: “மக்களின் கவனத்தை திசை திருப்பவே தொகுதி மறுவரையறை, நீட் போன்ற விவகாரங்களை திமுக எழுப்புகிறது. வேற்றுமை இருந்தாலும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்” என்று கூறினார்.



  • Apr 11, 2025 17:47 IST

    கூட்டணி குறித்து அ.தி.மு.க எந்தவித நிபந்தனையும் வைக்கவில்லை - அமித்ஷா

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா: “2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைக்கிறது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும். கூட்டணி குறித்து அ.தி.மு.க எந்தவித நிபந்தனையும் வைக்கவில்லை.” என்று கூறினார்.



  • Apr 11, 2025 17:43 IST

    நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க-வுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம் - அமித்ஷா

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - இ.பி.எஸ்  உடன் கூட்டாக சந்தியாளர்களிட்ம் பேசுகையில்,  “டாஸ்மாக், மணல் ஊழல்கள் குறித்து தேர்தலில் மக்களுக்கு தி.மு.க பதில் சொல்ல வேண்டும். போக்குவரத்து மின்சாரம், இலவச வேட்டி சேலை உள்ளிட்ட ஊழல்கள் குறித்து பதில் சொல்ல வேண்டும். ஆட்சியில் இருக்கிற பிரச்னைகளை திசை திருப்ப தி.மு.க மும்மொழிக் கொள்கை குறித்து பேசி வருகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட் விவகாரத்தை பயன்படுத்துகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க-வுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம்” என்று கூறினார்.



  • Apr 11, 2025 17:37 IST

    தமிழ் மொழியை மதிக்கிறோம்; பிரச்னையாக பார்த்ததில்லை - அமித்ஷா

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - இ.பி.எஸ்  உடன் கூட்டாக சந்தியாளர்களிட்ம் பேசுகையில், “தமிழ் மக்கள், தமிழ் மொழியை கவுரவமாக கருத்கிறோம். பிரச்னையாக பார்த்ததில்லை. பிரதமர் மொடி தமிழ் மொழியை மதித்து காசி - தமிழ் சங்கமம் நடத்தினார்.” என்று கூறினார்.



  • Apr 11, 2025 17:31 IST

    தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் - அமித்ஷா பேட்டி

    கூட்டணி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை தி.மு.க கையில் எடுத்துள்ளது; மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது தி.மு.க ஊழல், பட்டியலின மக்கள் மகளிர் வன்கொடுமை, போன்றவை எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.” என்று கூறினார். 



  • Apr 11, 2025 17:26 IST

    அ.தி.மு.க உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடாது - அமித்ஷா உறுதி

    கூட்டணி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில்: “அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி இயல்பானது. அ.தி.மு.க உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடாது; தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம்” என்று தெரிவித்தார்.



  • Apr 11, 2025 17:22 IST

    தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் - அமித்ஷா நம்பிக்கை

    இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறுதியானதாக அமித்ஷா அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவரப்போகும் தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.



  • Apr 11, 2025 17:15 IST

    அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறுதி - இ.பி.எஸ் - அமித்ஷா அறிவிப்பு

    ஒரே மேடையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்னாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறுதியானதாக அறிவீத்தனர்.



  • Apr 11, 2025 17:07 IST

    அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

    சென்னை கிண்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.



  • Apr 11, 2025 17:03 IST

    அமித்ஷாவை சந்திக்க தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி

    மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறுதியாகும் என்று தெரிகிறது.



  • Apr 11, 2025 16:58 IST

    அமித் ஷாவை இன்னும் சிறிது நேரத்தில் சந்திக்கும் இ.பி.எஸ்

    அமித் ஷா தங்கியுள்ள ஐ.டி.சி ஹோட்டலுக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி மாலை 5.30 மணிக்கு சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



  • Apr 11, 2025 16:55 IST

    அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி – அமித்ஷா

    பா.ஜ.க.,வின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும். தமிழக தலைவராக அண்ணாமலை அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது என அமித்ஷா கூறியுள்ளார்



  • Apr 11, 2025 16:53 IST

    பா.ஜ.க மாநிலத் தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன்

    தமிழக பா.ஜ.க தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகிறார். வேட்புமனுவுக்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், அவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் போட்டியின்றி தேர்வாகிறார்



  • Apr 11, 2025 15:27 IST

    நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு

    நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு; நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக பாஜகவின் 13ஆவது தலைவராக தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன் 



  • Apr 11, 2025 15:15 IST

    நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு

    பாஜக மாநில தலைவர் பதவிக்கான விருப்ப மனுவை தாக்கல் செய்தார் நயினார் நாகேந்திரன். தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்பது குறித்து நாளை மாலை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.



  • Apr 11, 2025 15:13 IST

    கட்சியின் அறிவுரைப்படி வேட்புமனு - நயினார்

    “கட்சியின் அறிவுரைப்படி வேட்புமனு தாக்கல் செய்தேன்; 10 ஆண்டு உறுப்பினராக இருந்தால்தான் போட்டியிட முடியும் என்ற விதி குறித்து அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும்” பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்தபின் நயினார் நாகேந்திரனெ பேட்டியளித்துள்ளார்.  



  • Apr 11, 2025 15:00 IST

    பாஜக மாநிலத் தலைவர் பதவி- நயினார் விருப்பமனு

    பாஜக மாநிலத் தலைவர் தேர்தலுக்காக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் விருப்ப மனு அளித்தார் தேர்தல் பொறுப்பாளர் தருண் சுக் இடம் தனது விருப்ப மனுவை அளித்தார் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவுக்கு அண்ணாமலை, எல்.முருகன், வானதி உள்பட 10 பேர் பரிந்துரை செய்துள்ளனர். 



  • Apr 11, 2025 14:56 IST

    அமித் ஷா உடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

    சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு கிண்டியில் உள்ள விடுதியில் அமித் ஷாவை 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார் ஜி.கே.வாசன்



  • Apr 11, 2025 14:54 IST

    புதிய தலைவர் யார்?

    தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார்? கமலாலயத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை அண்ணாமலை, எல்.முருகன் பங்கேற்பு



  • Apr 11, 2025 14:07 IST

    அமித் ஷா - குருமூர்த்தி தனியாக ஆலோசனை

    குருமூர்த்தியுடன் சுமார் 1 மணி நேரம் அமித் ஷா தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்; கூட்டணி விவகாரம், தமிழ்நாடு பாஜகவிற்கான புதிய தலைவர் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. குருமூர்த்தி வீட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, அரவிந்த் மேனன் ஆகியோர் மதிய உணவருந்தினர்



  • Apr 11, 2025 14:07 IST

    புதிய பேனர் பேசும் அரசியல் என்ன?

    மத்திய அமைச்சர் அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு தொடர்பான மேடையில் இருந்த பேனர் திடீரென மாற்றம். 'தேசிய ஜனநாயக கூட்டணி' என்பதை மாற்றி, 'தமிழ்நாடு பாஜக' என்கிற பெயரில் புதிய பேனர் வைக்கப்பட்டுள்ளது



  • Apr 11, 2025 13:11 IST

    அமித்ஷாவை சந்திக்க வந்த அகோரியால் பரபரப்பு

    உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஐ.டி.சி ஹோட்டலுக்கு வந்த அகோரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்



  • Apr 11, 2025 13:02 IST

    நயினார் நாகேந்திரன் வருகை

    பா.ஜ.க மாநிலத் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் கட்சி அலுவலகத்திற்கு நயினார் நாகேந்திரன் வருகை தந்துள்ளார். 



  • Apr 11, 2025 12:24 IST

    நேரம் மாற்றம் - 1.30 மணிக்கு அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு 

    சென்னை வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, சுமார் பிற்பகல் 1.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். ஏற்கனவே 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 



  • Apr 11, 2025 11:50 IST

    ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு அமித்ஷா வருகை

    சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்தார். பா.ஜ.க மாநில தலைவர் நியமனம், தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  



  • Apr 11, 2025 11:35 IST

    தமிழிசைக்கு நேரில் ஆறுதல் கூறிய அமித்ஷா

    குமரி அனந்தன் மறைவிற்கு, அவரது மகளும், பா.ஜ.க முன்னாள் தலைவருமான தமிழிசையை நேரில் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆறுதல் கூறினார். இதற்காக சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு அமித்ஷா வருகை தந்தார்.



  • Apr 11, 2025 10:19 IST

    தமிழிசை இல்லத்திற்கு செல்லும் அமித்ஷா

    சென்னையில் உள்ள தமிழிசையின் இல்லத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார். குமரி அனந்தன் மறைவுக்கு, தமிழிசையை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிப்பதற்காக அமித்ஷா அவரது வீட்டிற்கு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Apr 11, 2025 09:44 IST

    அமித்ஷா - ஜி.கே.வாசன் சந்திப்பு உறுதி

    சென்னை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பது உறுதியாகியுள்ளது.



  • Apr 11, 2025 09:41 IST

    அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி

    சென்னைக்கு வந்துள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை இன்று காலை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்யும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.



  • Apr 11, 2025 09:16 IST

    குருமூர்த்தி இல்லத்தில் அமித் ஷா ஆலோசனை

    மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இல்லத்தில் அமித் ஷா அவருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.



  • Apr 11, 2025 09:16 IST

    அமித் ஷாவை வரவேற்ற முக்கிய தலைவர்கள்

    மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜகவுக்கான மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.



  • Apr 11, 2025 09:15 IST

    அமித் ஷா வருகை முக்கிய காரணம்

    தமிழகத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் மத்திய பாஜக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். 



  • Apr 11, 2025 09:12 IST

    35-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் அமித் ஷா

    தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை இன்று(ஏப்.11) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமித் ஷாவை சந்திப்பது உறுதியாகிள்ளது. 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணி கணக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மாநிலத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முக்கியத்துவம் பெறும் என நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது. 



  • Apr 11, 2025 08:45 IST

    பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

    அமித்ஷா வருகையையொட்டி, இன்று காலை 10.30 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில், டெல்லியிலிருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை மாநகர காவல் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு, அவரது வருகைக்கான முழுமையான பாதுகாப்பு திட்டம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.



  • Apr 11, 2025 08:30 IST

    2026 சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்க திட்டம்

    2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கூட்டணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படலாம் என்று கூறப்படும் நிலையில் அது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு நாளைக்குள் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Apr 11, 2025 08:29 IST

    கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த திட்டம்

    கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரை தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 



  • Apr 11, 2025 08:05 IST

    தமிழக பாஜக தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது

    இன்று அமித் ஷா சென்னை வந்துள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாளை மாலை தேர்தல் நடைபெறும் என தமிழக பாஜக துணைத்தலைவரும் கட்சியின் மாநில தேர்தல் அதிகாரியுமான எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.



  • Apr 11, 2025 08:03 IST

    அமித் ஷா சென்னை வருகையும் அன்புமணி நீக்கமும்

    அமித் ஷா சென்னை வந்துள்ள நிலையில் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, தாமே இனி தலைவர் என டாக்டர் ராமதாஸ் அறிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



  • Apr 11, 2025 07:42 IST

    கூட்டணிக் கட்சியினரை சந்திக்க அமித்ஷா திட்டம்

    இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள அமித்ஷா கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரை அமித்ஷா சந்திக்க உள்ளார். மாலையில் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று செய்தியாளர்களையும் சந்திக்க உள்ளார்.



  • Apr 11, 2025 07:37 IST

    மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை

    2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள அமித் ஷா இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Apr 11, 2025 07:35 IST

    அமித் ஷா செய்தியாளர் சந்திப்பு

    சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நண்பகல் 12 மணிக்கு அமித்ஷா செய்தியாளர்களை  சந்திக்கிறார். அதிமுக உடனான கூட்டணி குறித்து முக்கிய தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Apr 11, 2025 07:34 IST

    அமித் ஷா - ஓபிஎஸ் சந்திக்க திட்டமா?

    சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ”ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்” என பதில் அளித்துள்ளார்.



  • Apr 11, 2025 07:32 IST

    சென்னை வந்தார் அமித்ஷா

    டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அமித்ஷா தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களை இன்று சந்திக்கிறார்.



  • Apr 11, 2025 07:30 IST

    அமித் ஷா சென்னை வருகை

    2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி, பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



Amit Shah Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: