Advertisment

கோயிலில் கிரிக்கெட் விளையாடுவதில் என்ன தவறு? - எல்.முருகன்

ரயில் விபத்து குறித்த ராகுல் காந்தியின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது; கோயிலில் கிரிக்கெட் விளையாடியதில் தவறில்லை – மத்திய இணையமைச்சர் எல். முருகன்

author-image
WebDesk
New Update
L Murugan

ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரப்பெண்களில் வேலுநாச்சியாரும், குயிலியும் முக்கியமானவர்கள். வீரத்தாய் குயிலியின் 144 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை அருகே சூரக்குளம் பகுதியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் நினைவு மணிமண்டபத்தில் உள்ள குயிலியின் திருவுருவச் சிலைக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். 

Advertisment

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, "இந்தியாவில் மக்கள் போகாத பல பகுதிக்கு கூட ரயில் சென்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.  ரயில்வே துறை பல்வேறு சீரமைப்புகளை மேற்கொண்டு வருகிறது. இன்னும் ஓராண்டில் புல்லட் ரயில் இந்தியாவில் ஓடத் துவங்கும். சென்னையில் நேற்று நடைபெற்ற ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அது குறித்து தெரியவரும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தமிழக அரசிற்கு தேவையான ரூ.7500 கோடி நிதியை நிதியமைச்சர் விடுவித்துள்ளார். மத்திய அரசு கேட்டுள்ள சில விவரங்களை தமிழக அரசு வழங்கியவுடன், கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்கும்.

சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறு இல்லை. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எந்த மாற்றமும் நிகழவில்லை. கருணாநிதியின் குடும்பத்தினருக்கு மட்டுமே உபயோகமாக இருக்குமே தவிர, தமிழக மக்களுக்கு உபயோகமாக இருக்கப்போவதில்லை.

சுதந்திரப் போராட்ட தியாகிகளை கெளரவிக்கும் விதமாக வீரத்தாய் குயிலிக்கு தபால் தலையை வெளியீட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். ஆளுநர் உடன் தமிழக அரசு இணைந்து செயல்படுவதை அனைவரும் வரவேற்கின்றனர். அதுவே எனது விருப்பமும். இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார். 

முன்னதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயிலில் உள்ள பெருமாள் சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னிதி, தாயார் சன்னிதி உள்ளிட்ட சன்னிதிகளில் அவர் சென்று வழிபட்டார். 

பின்னர், செய்தியாளர்களிடம் எல்.முருகன் தெரிவித்ததாவது; பெருமாளை வழிபடும் வைசிய குலத்தை சேர்ந்த நாங்கள் நான்கு வாரம் விரதமிருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்தப் புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட்டதை மிகுந்த பாக்கியமாக கருதுகிறேன்.

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, அதே போன்று திருச்சி விமான தொழில்நுட்ப கோளாறு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அதன் அறிக்கையில் விபரம் தெரியவரும்.

ரயில் விபத்து குறித்து அரசியல் செய்யக்கூடாது. ரயில் விபத்து குறித்த ராகுல் காந்தியின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது. திருவள்ளூரில் நடந்த ரயில் விபத்து சிறு விபத்து. கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளது. எனவே, இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். ரயில்வே துறையினர் சிறப்பாகவும், வேகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.
வந்தேபாரத் ரயில் தொடங்கி புல்லட் ரயில் வரை அதிகமான ரயில்வே நெட்வொர்க்கை வைத்துள்ளது இந்தியா தான். பிரதமர் மோடி அவர்கள் ரயில்வே உயர்ந்த தரத்திற்கு உயர்த்தி உள்ளார் ரயில்வே பாதுகாப்பு கவசங்களுக்கு கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறிய விபத்தை வைத்து ரயில்வேயை குறைகூற முடியாது ரயில் விபத்து குறித்து உரிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன், முன்னாள் நிர்வாகி பார்த்தசாரதி உட்பட கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்கள்: சக்தி சரவணன் மற்றும் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Train Trichy L Murugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment