டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் மேலூர் மக்களை ஏமாற்றியுள்ளார் என திருச்சி விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்ததாவது;
டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் மேலூர் மக்களை ஏமாற்றியுள்ளார். நேற்று அவர் அங்கு நாடகம் தான் நடத்தியுள்ளார் டங்ஸ்டன் ஏலம் ரத்தாக முழு காரணம் தமிழக பா.ஜ.க தான். சுரங்கம் அமையுள்ள பகுதியில் கோவில்களும் புராதான சின்னங்களும் உள்ளது என அந்த மக்கள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். அதனை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஏலத்தை ரத்து செய்ய காரணமாக இருந்தது தமிழக பா.ஜ.க தலைவர் தான்.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் விவகாரத்தையும் டங்ஸ்டன் விவகாரத்தையும் ஒப்பிடக்கூடாது.
வேங்கை வயல் விவகாரத்தை திசைதிருப்பி பட்டியல் இன மக்களுக்கு துரோகம் செய்யும் அரசாக தி.மு.க அரசு உள்ளது. அதனால்தான் இந்த விவகாரத்தை சி.பி.ஐ.,க்கு கொடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சி.பி.ஐ ஆல் தான் வேங்கை வயல் மக்களுக்கு சரியான நீதியை கொடுக்க முடியும் என்றார்.
க.சண்முகவடிவேல்