திருச்சியில் 4 வழிச்சாலை திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி - சென்னை பசுமை வழி சாலை, திருச்சி - தஞ்சை, திருச்சி - கரூர் 6 வழி சாலை மற்றும் திருச்சி - காரைக்குடி 4 வழி சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - கரூர் சாலை ஒரு பகுதி குடியிருப்புகளாகவும், மற்றொரு பகுதியில் காவிரி ஆறும் இருப்பதால் சாலையை விரிவுப்படுத்த சிரமம் இருந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இந்த சாலைகளை 6 வழி சாலையாக மாற்றுவதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் வெளியிட்டார். விரைவில் இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக திருச்சியில் மிகப்பெரிய சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட இருக்கிறது. துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 25 கிமீ பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரை 19.96 கிமீ 4 வழி சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த இரண்டு புதிய நான்கு வழி சாலைகளும் அமைக்க அரசிற்கு 16 கோடி மதிப்பீட்டில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சாலைக்கான அனுமதி இன்னும் 6 மாத காலத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனுமதி கிடைத்த சில மாதங்களிலேயே ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“