Advertisment

எல்லோராலும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிவிட முடியாது: "மெர்சல்" குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்!

விஜய் திரைத்துறையை தவறாக பயன்படுத்தக்கூடாது. அவர் நடித்து வெளியாகி உள்ள 'மெர்சல்' படத்தில் மத்திய அரசை விமர்சித்து வசனங்கள் இடம் பெற்றுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எல்லோராலும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிவிட முடியாது: "மெர்சல்" குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்!

நாகர்கோவிலில் இன்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் திரைத்துறையில் பிரபலமாகி அரசியலுக்கு வந்து சரித்திர சாதனை படைத்தவர் எம்.ஜி.ஆர். இவர், திரையுலகில் இருக்கும்போதே அரசியலிலும் ஈடுபட்டு மக்களின் மனங்களை அறிந்தவர். இதனால் தமிழகத்தின் முதல்வரானார்.

Advertisment

திரையுலகம் மட்டுமின்றி எந்தத் துறையில் இருந்தும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஜனநாயக முறைப்படி ஓட்டு உரிமை உள்ளவர்கள் அரசியலில் ஈடுபடலாம்.

பொது வாழ்வில் கருத்து தெரிவிப்பவர்கள் அதனை முழுமையாக அறிந்த பின்பே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். ஆனால் நடிகர் கமலஹாசன் ஒரு கருத்தை தெரிவித்து விட்டு பின்னர் அதை மாற்றிக் கொள்கிறார். பண மதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்களில் அவர் இவ்வாறு பேசி உள்ளார். அவர் இன்று ஒன்றை சொல்வார், நாளை அதையே மாற்றி பேசுவார்.

நடிகர் விஜய், தான் சார்ந்திருக்கும் திரைத்துறையை தவறாக பயன்படுத்தக்கூடாது. அவர் நடித்து இப்போது வெளியாகி உள்ள 'மெர்சல்' படத்தில் மத்திய அரசை விமர்சித்து வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இது மக்களை குழப்புவதாக உள்ளது. அந்த வசனங்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். சினிமாவில் நடிக்க வந்த எல்லோரும் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிவிட முடியாது. அவர்களின் பாணியே வேறு.

பிற நாட்டில் எப்படி வரி விதித்துள்ளார்கள் என்பது பற்றிப் பேசவேண்டிய அவசியமில்லை. நம் நாட்டின் சூழல் வேறு. பிற நாட்டின் சூழல் வேறு. நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், நேரடியாக வரட்டும். அதை விட்டுவிட்டு, திரைப்படங்களில் தவறான அரசியல் கருத்துகளைப் பரப்பக்கூடாது.

’சோ’-வும் அரசியல் தொடர்பான திரைப்படங்கள் எடுத்திருக்கிறார். அவை, ரசிக்கும்படி இருக்கும். அவர் விமர்சிக்கும் அரசியல்வாதிகளே அந்த விமர்சனங்களை ரசிப்பார்கள். அவரின் விமர்சனங்களில் நகைச்சுவை கலந்து ரசிக்கும்படி இருக்கும்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. டெங்கு காய்ச்சல் உற்பத்தியாக காரணமாக இருந்த நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அபராதம் விதித்ததுபோல் சுகாதாரத்தை சரியாக பேணாத அரசு பள்ளிகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகங்கள் இதனை கண்காணித்து செயல்பட வேண்டும்.

கர்நாடகாவில் மெர்சல் படத்தை திரையிடவிடாமல் அங்குள்ளவர்கள் தடுத்துள்ளனர். அங்கு தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளை காங்கிரஸ் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் தி.மு.க. இதனை தட்டிக்கேட்பது இல்லை.

தி.மு.க. தொண்டர்கள் தூங்கிக் கிடக்கிறார்கள். அவர்களை தட்டி எழுப்பவே மு.க. ஸ்டாலின் மீண்டும் 180 நாள் எழுச்சி யாத்திரை தொடங்க இருக்கிறார். ஏற்கனவே நடந்த நமக்கு நாமே யாத்திரைக்கு எந்த பலனும் கிடைக்காத நிலையில் இப்போது தொடங்க இருக்கும் யாத்திரையும் தி.மு.க.வுக்கு பலன் தராது.

தமிழகத்தில் கருணாநிதியின் செயல்பாடு குறைந்து போனதும், ஜெயலலிதாவின் மரணமும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதை மறுப்பதற்கில்லை.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தேன். அவர் அதை ஏற்றுக் கொண்டார். மத்திய கல்வி அமைச்சருடன் பேசியபோது 62 நவோதயா பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அதில், 10 பள்ளிகளையாவது தமிழகத்திற்கு கொண்டு வர முயற்சி செய்தேன். ஆனால் தி.மு.க.வினர் இதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Mersal Vijay Minister Pon Radhakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment