தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 3ம் தேதி தனது 95-வது பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாடினார். இந்தப் பிறந்தநாள் விழாவில், கட்சித் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சென்னை கோபாலப்புரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டத் தேசியத் தலைவர்கள் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கோபாலப்புரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார். 95வது பிறந்தநாளையொட்டி தனது வாழ்த்தை நேரில் தெரிவிக்க சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
இந்தச் சந்திப்பின்போது எம்.பி மற்றும் கருணாநிதியின் மகள் கனிமொழி உடனிருந்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், 'கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமில்லாது இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி. சிறந்த எழுத்தாளர். பேச்சாளர் கருணாநிதி. கருணாநிதி அவரது சந்தோஷத்தை முகத்தில் காட்டினார்' என்று தெரிவித்தார்.
June 2018மூத்த அரசியல் தலைவர், எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளரும் 5 முறை தமிழகத்தை ஆண்ட முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களின் 95 வது பிறந்த நாளையொட்டி இன்று மாலை அவரை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்திய போது..உடன் திமுக ராஜ்யசபை உறுப்பினர் திருமதி @KanimozhiDMK pic.twitter.com/QbwOswW27N
— Pon Radhakrishnan (@PonnaarrBJP)
மூத்த அரசியல் தலைவர், எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளரும் 5 முறை தமிழகத்தை ஆண்ட முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களின் 95 வது பிறந்த நாளையொட்டி இன்று மாலை அவரை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்திய போது..உடன் திமுக ராஜ்யசபை உறுப்பினர் திருமதி @KanimozhiDMK pic.twitter.com/QbwOswW27N
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) June 4, 2018
இது சந்திப்பு குறித்த பதிவை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.