தமிழ்நாட்டில், மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு இன்று வந்தடைந்தனர். மத்திய குழுவினர் முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 2 வாரங்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், டெல்டா மாவட்டங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில், மழை வெள்ளத்தில் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டன. அதே போல, கன்னியாகுமாரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மழை வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மழை வெள்ள பாதிப்பின்போது, தமிழக அரசு விரைவாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மீட்பு பணி முகாம்களை அமைத்து மக்களை முகாம்களில் தங்க வைத்து உணவு, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி விரைந்து நடவடிக்கை எடுத்தது.
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து, பிரதமர் மோடி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் மழை வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மீட்பு மற்றும் நிவாரணபணிகளில் மத்திய அரசு உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி அளித்தார். தமிழக மக்களின் நலன், பாதுகாப்பு குறித்து பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி ட்வீட் செய்தார்.
மழை வெள்ள பாதிப்பு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைத்த அமைச்சர்கள் குழு டெல்டா பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து, வெள்ள சேத விவர அறிக்கை தமிழ்நாடு அரசு சார்பில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அளிக்கப்பட்டது.
தமிழக அரசு அளித்த வெள்ள சேத அறிக்கையில், தமிழகத்திற்கு வெள்ள சேத நிவாரணமாக 2 ஆயிரத்து 79 ரூபாய் அளிக்க வேண்டும் என்ற கோரப்பட்டது. மேலும், முதற்கட்டமாக, மத்திய அரசு உடனடியாக 550 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. இதையடுத்து, மத்திய அரசு தமிழகத்தில் வெள்ள சேத பாதிப்புகளை ஆய்வு செய்ய குழுவை அனுப்பிவைப்பதகாவும், மத்தியக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பேரிடர் நிதி ஒதுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்தியக் குழு இன்று (நவம்பர் 21) சென்னை வந்தடைந்தனர்.
மத்தியக் குழு இன்று தலைமை செயலாளர் இறையன்புடன் ஆலோசனை நடத்திய பின்னர், மத்தியக் குழு இரண்டு குழுக்களாகப் பிரிந்து, நாளை (நவம்பர் 22) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 23) 2 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர்.மேலும், 24ஆம் தேதி மத்திய குழு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். மத்தியக் குழுவினர் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பல்துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், மீட்பு நடவடிக்கைகள், நிவாரண முகாம்கள் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை, ரிப்பன் மாளிகையில் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழு மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி உடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், சென்னை மாநகராட்சியில் வெள்ளை பாதிப்பு குறித்து வைக்கப்பட்டு உள்ள புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
இந்த குழு தனித்தனியாக சென்று நவம்பர் 22, 23 ஆகிய இரண்டு நாளும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
அதன்படி, நாளை (நவம்பர் 22) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு குழுவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு குழுவும் ஆய்வு செய்ய உள்ளனர்.
நாளை மறுநாள் (நவம்பர் 23) கடலூர், மையிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு குழுவும் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஒரு குழுவும் ஆய்வு செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய வந்துள்ள மத்தியக் குழுவினரை வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து வழிநடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியக் குழுவின் ஆய்வு நிறைவடைந்த பிறகு, நவம்பர் 24ம் தேதி மத்தியக் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன ஆலோசனை நடத்த உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.