Centre approves Cauvery – Pennaru linking project: காவிரி – பெண்ணாறு நதி இணைப்பு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2022-23 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அப்போது கங்கை – கோதாவரி, கிருஷ்ணா - காவிரி – பெண்ணாறு நதிகள் இணைப்பு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்ட பிறகு, அவர்களின் அனுமதி கிடைத்தவுடன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும் நதிகள் இணைப்பு தொடர்பான 5 திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நீர்ப்பாசன திட்டங்கள் ரூ.44 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், விவசாய நிலங்களை அளவிடவும், பயிர்களை ஆய்வு செய்யவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil