/indian-express-tamil/media/media_files/LgfuXydRtJXaXzcQHWTF.jpeg)
Mysore- Mayiladuthurai Express
மயிலாடுதுறை-மைசூர் விரைவு ரயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதுடன், சீர்காழி, சிதம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லவும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை-மைசூர் விரைவு ரயில், கர்நாடகாவில் உள்ள மைசூரு சந்திப்பு, மற்றும் தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை சந்திப்பை இணைக்கும் ரயில் சேவை ஆகும். இது தஞ்சாவூர் சந்திப்பு வழியாக திருச்சிராப்பள்ளி சந்திப்பு, ஈரோடு சந்திப்பு மற்றும் பெங்களூர் சிட்டி வழியாக மைசூரை சென்றடைகிறது.
இந்த ரயில் சேவையை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், சிதம்பரம், சீர்காழியிலும் நின்றுபயணிகளை ஏற்றி இறக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசும், எம்.பி.க்களும் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.
இநத் நிலையில், மயிலாடுதுறை- மைசூரு விரைவு ரயில் சிதம்பரம், சீர்காழி நிறுத்தத்துடன் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் சிதம்பரம், சீர்காழி, திருச்சி, கடலூர் ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.