பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி ஏறக்குறைய 5 ஆண்டுகள் கடந்த நிலையில், மதுரையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) கட்டுவதற்கான டெண்டரை மத்திய அரசு வியாழக்கிழமை (ஆக.18) வெளியிட்டுள்ளது.
இங்கு, 2019 ஜனவரி 27ஆம் தேதி மோடி அடிக்கல் நாட்டினார். இந்த எய்ம்ஸ் மதுரையில் இருந்து 13.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி என்னானது என திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
இந்த எய்ம்ஸ் ஆனது, 108,325 சதுர மீட்டர் பரப்பளவில் 870 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக இருக்கும்.
வெளிநோயாளர் பிரிவு, மற்றும் அவசர சிகிச்சை, ஆயுஷ் பிளாக், டீச்சர் பிளாக், 750 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், மாநாட்டு அரங்குகள் உள்ளிட்ட வசதிகளும் இருக்கும்.
மொத்த கட்டுமானப் பகுதி, தள மேம்பாட்டுப் பகுதியைத் தவிர்த்து) சுமார் 2,00,851 சதுர மீட்டர் என்று டெண்டர் ஆவணம் கூறுகிறது.
இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வளாகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைய சுமார் 33 மாதங்கள் ஆகும்.
தற்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து தற்காலிகமாக இயங்கி வருகிறது.
மத்திய அரசு டாக்டர் எம் ஹனுமந்த ராவ் மற்றும் டாக்டர் பிரசாந்த் லவானியா ஆகியோரை நிர்வாகிகளாக நியமித்துள்ளது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“