தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக திமுக குரல் எழுப்பியுள்ள நிலையில், தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சரான பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு முதல் மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை முரண்பாடு வரை அனைத்தையும் சுட்டிக்காட்டி விளக்கமளித்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் ஐடியா எக்ஸ்சேஞ்ச் அமர்வில் பேசிய தமிழக நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், பணக்கார மாநிலங்களிலிருந்து ஏழை மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வில் இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று குற்றஞ்சாட்டினார்.
பாஜக ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மொத்த மானியங்கள் மற்றும் திட்டங்களின் வரிகளில் ஒவ்வொரு ரூ.1க்கும், உ.பி.க்கு ரூ. 2.90 கிடைத்தது. 2024-ம் ஆண்டில், அது தமிழ்நாட்டிற்கு ரூ.1 ஆகவும், உ.பிக்கு ரூ. 4.35 ஆகவும் இருக்கிறது என்றார்.
தமிழ்நாட்டை விட உத்தரப்பிரதேசத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. நீங்கள் தொடர்ந்து பணத்தை எடுத்துக் கொண்டே இருந்தும், எந்த நன்மையும் ஏற்படுத்த முடியாமல்போனால், நாம் எப்படி சமமாக இருக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது? இது எங்கே முடிகிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"ஏழை மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்கள் தங்கள் தனிநபர் வருமானத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவில்லை என்றால் நாட்டிற்கான எதிர்காலம் இல்லை. மேலும் இதில் கவனம் செலுத்த வேண்டிய டெல்லியில் உள்ள மத்திய அரசு. தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்கும், துன்புறுத்தி அச்சுறுத்துவதற்குமே மத்திய கவனம் செலுத்துகிறது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நாங்கள் இனி பிரதிநிதித்துவத்தை இழக்க விரும்பவில்லை என்றார். நமது உரிமைகளுக்காகப் போராடாவிட்டால் நமக்கு என்ன நடக்கும்?”
பிரச்சனை தமிழ்நாடு தேசிய கல்விக் கொளையை ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பது அல்ல. உ.பி. மற்றும் பீகாரில் போதுமான குழந்தைகளுக்கு ஒரு மொழியை முறையாகக் கற்பிக்க முடியுமா? விகிதத்தை மேம்படுத்த முடியுமா?” என்பதுதான் என்றார்.
திமுக ஆட்சியில் மாநிலத்தில் தமிழ் வழியில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பழனிவேல் தியாகராஜன், கல்வியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது என்றார்.