ராஜ்பவனில் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல்; மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் 40 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் – தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் 40 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் – தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்

author-image
WebDesk
New Update
ராஜ்பவனில் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல்; மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: தமிழச்சி தங்கபாண்டியன்

தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து பேசியபோது (புகைப்படம் – சன்சத் டிவி/ யூடியூப்)

Liz Mathew

தமிழகத்தில் ஆன்லைன் கேமிங்/ சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஏன் தலையிட வேண்டும் என்று லிஸ் மேத்யூவிடம் தி.மு.க எம்.பி டி.சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் கூறுகிறார்.

Advertisment

இதையும் படியுங்கள்: உப்புமா கதை சொல்லி பா.ஜ.க-வை சீண்டிய திருச்சி சிவா… கலகலனு சிரித்த ராஜ்ய சபா உறுப்பினர்கள்!

இன்று கேள்வி நேரத்தின் போது நீங்கள் எழுப்பிய கவலை என்ன?

ஆன்லைன் கேம்கள் மற்றும் சூதாட்டம் குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கவலை தெரிவித்தார். மாநில அரசுகளின் ஒப்புதலுடன் மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

கவர்னர் முன் நிலுவையில் உள்ள ஒரு மசோதாவை குறிப்பிட்டுள்ளீர்கள்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை எங்களது <தமிழ்நாடு> அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது, ஆனால் அது ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது என்று நான் கூறினேன். நான் மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிய விரும்பினேன்... இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை அறிய விரும்பினேன்.

இது தமிழகத்தில் தீவிரமான பிரச்சினையா?

Advertisment
Advertisements

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் 40 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது ஒரு தீவிரமான பிரச்சினை, இளைஞர்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது, ஏனெனில் அவர்களில் பலர் இதில் ஈர்க்கப்படுகிறார்கள். மற்றொரு கவலை, பிரபலங்கள் சூதாட்ட தளங்களுக்கு விளம்பரம் செய்வது. ஆன்லைன் கேம்களுக்கும் சூதாட்டத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு உள்ளது மற்றும் சலுகைப் பகுதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

அமைச்சரின் பதிலில் நீங்கள் உறுதியாக உணர்ந்தீர்களா?

இல்லவே இல்லை. சில குறிப்பிட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் நேரடியாக பதில் அளிக்க முடியாது என்று அமைச்சர் கூறினார். உறுதியான சட்டத்தை உருவாக்குவதற்கு அரசு இன்னும் பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது என்றார்.

மக்களின் வாழ்வில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் மசோதாக்களை ஆளுநர் காலதாமதம் செய்வதாக உங்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ஆமாம் கண்டிப்பாக. இது போன்ற உணர்வுப்பூர்வமான மற்றும் கோரிக்கை எழுப்பும் பிரச்னைகளில் மாநில அரசு மசோதாக்களை நிறைவேற்றினால், அவை விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும். நீட் தேர்வு ரத்து தொடர்பான மசோதாவும் நிலுவையில் உள்ளது. நீட் தேர்வால் தமிழகம் முழுவதும் ஏராளமான மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மசோதா கவர்னர் அலுவலகத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். மத்திய அரசு தலையிட வேண்டிய நேரம் இது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: