கோவை மாவட்டத்தில், தனியார் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் நடந்த செயின் பறிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, காந்திபுரத்தில் இருந்து தனியார் பேருந்தில் மூதாட்டி ஒருவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 100 அடி சாலையில் உள்ள கற்பகம் காம்ப்ளக்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்று கொண்டு இருந்த போது, தன்னிடமிருந்த செயின் திருடப்பட்டதாக மூதாட்டி கூச்சலிட்டார்.
இதைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்த சக பயணிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, மூதாட்டியின் செயின் பறிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில், திருடப்பட்ட தனது செயினை மீட்டுத் தருமாறு போலீசாருக்கு, மூதாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.