/tamil-ie/media/media_files/uploads/2023/08/New-Project-53.jpg)
coimbatore police vehicle check
கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு, பணப் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரத்தினபுரி, டாடா பாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் ஒரே நாளில் நடந்தது உள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக மாநகர காவல்துறை சார்பில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-28-at-09.45.24.jpeg)
இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை தேடி வருகின்றனர். மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகர் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் பகுதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-28-at-09.45.25.jpeg)
மேலும் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ரத்தினபுரி எனப் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனங்களில் வருபவர்களிடம் விசாரணை நடத்தி, அதன் பின்னரே அனுமதித்து வருகின்றனர். வாகன திருட்டு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.