சென்னையில் ட்ரோன் மூலம் தேடி, சங்கிலி பறிப்பு கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Chennai: Chain snatching suspect tracked by drones; shot dead: சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள்; ட்ரோன் மூலம் தேடுதல் நடத்தி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சென்னைப் புறநகர் பகுதியில் திங்கள்கிழமை 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) நடத்திய தீவிர வேட்டையைத் தொடர்ந்து செயின் பறிப்பு கொள்ளையன் சுட்டுக் கொல்லப்பட்டான். காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றவாளிகள் இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் செயின் பறிப்பு போன்ற மோசமான வேலைகளைச் செயது வந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்கச்சாவடியில் பேருந்திற்காக காத்திருந்த 55 வயது பெண்ணின் தங்கச் சங்கிலியை இந்த இரண்டு பேரும் பறிக்க முயன்றபோது, ​​அவள் சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டு சத்தம் போட்டார். அப்போதுதான் அவர்கள் சங்கிலியுடன் தப்பிக்கும் முயற்சியில் காற்றில் சுட்டனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் ஏரிப் பகுதியில் இருவரையும் தேடும் பணியில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர் ”என்று இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரி தெரிவித்தார்.

குற்றவாளிகள் தங்களை சுட முயன்றதாகவும், அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டியதால் திருப்பி சுட்டதாகவும் போலீசார் கூறினர். மற்றொரு அதிகாரி, குற்றவாளிகளிடம் ஆயுதம் இருப்பதை அறிந்திருந்ததால், போலீஸ் தேடல் குழுக்கள் தேவைப்பட்டால் சுட அனுமதிக்கப்படும் என்றார்.

இறந்தவரின் பெயர் மூர்த்தாசா, அவருக்கு வயது 25. கைது செய்யப்பட்டவர் அக்தர், அவருக்கு வயது 28. ஞாயிற்றுக்கிழமை செயின் பறிப்பு சம்பவத்தைத் தவிர, அக்டோபர் 4 ஆம் தேதி அரசு மதுபானக்கடை ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்திலும் இவர்கள் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால் ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியது. மேலும், “இறந்தவர் மற்றும் காவலில் உள்ள அவரது கூட்டாளி வட இந்தியாவில் இருந்து துப்பாக்கியை கொண்டு வந்ததாக எங்களுக்கு தகவல் உள்ளது” என்றும் அந்த அதிகாரி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chain snatching suspect tracked by drones shot dead

Next Story
Tamil Nadu Local Body Election Results : அதிமுகவுக்கு பலத்த அடி; அசுர பலத்துடன் ஸ்வீப் செய்த திமுக
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X