அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் தலைவர் பிரதாப் சி.ரெட்டிக்கு நேற்று(23.3.18) நள்ளிரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மயங்கிய நிலையில் இருந்த அவருக்கு இருதய அடைப்புக்கான ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டது. அதன் பின்பு, சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோவில் மருத்துவமனையில் பிரதாப் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரதாப்புக்கு உயரிய தரத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அப்போலோவில் முக்கிய பிரமுகர்களுக்கான வார்டு அறையில் பிரதாப்பு ரெட்டி தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டிருந்த பிரதாப் ரெட்டியிடன் ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றி கேள்வி எழுப்பபட்டிருந்தது. அதில், ”ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பிரிவில் எதிர்பாராத விதமாக சிசிடிவி கேமராவை அணைத்து வைத்திருந்தோம்” என்று பிரதாப் ரெட்டி கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், பிரதாப் ரெட்டிக்கு தீடிரென்று மாரடைப்பு ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.