scorecardresearch

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்

புதுச்சேரியின் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather Report
இன்று (டிச.4) தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரு தினங்களில் ஏற்படும் பட்சத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின்பல்வேறு பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று (டிச.4) தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களான விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

புதுச்சேரியின் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 4 முதல் 5 நாள்கள் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chance of heavy rain in 16 districts of tamil nadu today