அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும், மழை பெய்த பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தீபாவளியன்று மழை பெய்யுமா என்ற கேள்வி மக்களிடையே இருந்து வந்தது. அதன்படி, இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில், தீபாவளியான அக்டோபர் 31-ஆம் தேதி மற்றும் நவம்பர் 1-ஆம் தேதி ஆகிய இருதினங்களும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த இரு தினங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“