தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் நிலவுகிறது.
இதனால், கரூர், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்.
இதேபோல் திங்கள்கிழமை (ஜூன் 5) கரூர், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழிய வாய்ப்புகள் உள்ளன.
தொடர்ந்து, தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை ஜூன் 6-8ஆம் தேதிவரை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் சில மாவட்டங்களில் வெப்ப நிலையும் அதிகமாக காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“