Tamil Nadu Weather Forecast: வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, மேற்கு மத்திய -வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிலுள்ள சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், தமிழகத்தில் திருப்பூர், தேனி திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil