Advertisment

‘இது தோல்விப் பாதை இல்லை, படிப்பினை’ -மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் கருத்து

Chandrayaan 2 Failure: விரைவில் நாம் நிலவை அடைவோம். இஸ்ரோவுக்கு நன்றி. இந்த நாடு உங்களை நம்புகிறது, பாராட்டுகிறது’ என கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Chandrayaan 2 Updates: சந்திரயான் 2 எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாவிட்டாலும், பலரும் விஞ்ஞானிகளில் செயல் திறனுக்கு மரியாதை கொடுத்து வருகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், ‘ஒரு பில்லியன் மக்களை விண்வெளியை நோக்கி பார்க்க வைத்த இஸ்ரோ குழுவினருக்கு நன்றி’ என கூறினார்.

Advertisment

நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை இறக்கி ஆய்வு செய்யும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டது. இன்று அதிகாலை 1.30 மணிக்கு இதற்கான நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நிலவில் இருந்து 2.1 கிமீ தொலைவில் இந்தப் பணியில் சறுக்கல் ஏற்பட்டது. விக்ரம் லேண்டர், பெங்களூருவில் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது. இதனால் சந்திரயான் 2 எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. எனினும் தேசிய அளவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல தலைவர்களும் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்து கூறினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘ஒரு பில்லியன் மக்களை விண்வெளியை நோக்கி பார்க்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது எங்களை நம்பிக்கை வைக்கவும் ஊக்கமளித்த இஸ்ரோ குழுவினருக்கு நன்றி’ என குறிப்பிட்டிருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், ‘இது தோல்விக்கான பாதை அல்ல. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் படிப்பினை இருக்கிறது. இது மதிப்பு மிக்க அத்தகைய படிப்பினை தருணம். விரைவில் நாம் நிலவை அடைவோம். இஸ்ரோவுக்கு நன்றி. இந்த நாடு உங்களை நம்புகிறது, பாராட்டுகிறது’ என கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.

 

Mk Stalin Kamal Haasan Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment