கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற உம்மன் சாண்டி சட்டமன்ற உறுப்பினர், மாநிலத்தின் அமைச்சர் தொடர்ந்து முதலமைச்சர் என்ற உயர்ந்த பதவியில் இருந்தார்.
புதுப்பள்ளி தொகுதி மக்களின் ஆதரவை பெற்றது போல், மாநிலத்தின் மக்கள் ஆதரவையும் பெற்றிருந்த உம்மன் சாண்டி மறைவிற்கு பின் அவரது மகன் சாண்டி உம்மன் கடந்த செப்டம்பர் 5-ம் நாள் நடந்த இடைத்தேர்தல் போட்டியிட்டார். செப்டம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் கடந்த 12 தேர்தல்களில், உம்மன் சாண்டி பெற்ற வாக்குகளை எல்லாம் தாண்டி 36,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சண்டி உம்மனை எதிர்த்து போட்டியிட்ட மார்க்ஸ்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கடந்த தேர்தலை விட குறைந்த வாக்குகள் பெற்ற நிலையில், பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பெற்ற வாக்குகள் 6000க்கும் சற்று அதிகம் வாக்குகள் தான் பெற்றார்.
புதுப்பள்ளி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் நாளை, கேரளம் சபாநாயகர் முன், சாண்டி உம்மன் நாளை சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க இருக்கும் நிலையில்.
உம்மன் சாண்டி கன்னியாகுமரிக்கு எப்போது வந்தாலும் கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசித்து காணிக்கை செலுத்துவது வாடிக்கை என்ற நிலையில்.
நாளை புதுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க இருக்கும் நிலையில் இன்று (செப்டம்பர்_9)ம் நாள் மாலையில் கன்னியாகுமரி வந்த சாண்டி உம்மன், உள் ஊரைச் சேர்ந்த குமரி கிழக்கு மாவட்டம் செயலாளர் தாமஸ், மற்றும் சேகர் ஆகியோர் உடன் சென்று பகவதி அம்மனை தரிசித்து நன்றி காணிக்கை செலுத்தினார்.
பகவதி அம்மன் கோயிலுக்கு வந்த,புதுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் சாண்டி உம்மனை கோயில் மேலாளர் வரவேற்று சாமி தரிசனம் செய்ய உடன் இருந்து கண்காணித்தார்.
செய்தி: த.இ.தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“