/indian-express-tamil/media/media_files/2025/09/08/airport-moorthy-arrest-2025-09-08-05-43-14.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று இரவு சந்திர கிரகணம்: இன்று 9.47 மணி முதல் திங்கள் அதிகாலை 1.31 மணி வரை சந்திரகிரகணம் நிகழ்கிறது. சந்திரகிரகணம் நிகழ்வதை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இன்று மாலை நடை அடைக்கப்படுகிறது.
- Sep 08, 2025 05:49 IST
மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டும் பேச்சு குறுகிய எண்ணம்: இ.பி.எஸ் மீது கிருஷ்ணசாமி விமர்சனம்
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க பாஜக அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"ஒட்டுமொத்த மக்கள் நலன் சார்ந்து பேசாமல், குறுகிய எண்ணத்துடன் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். ஜெயலலிதாவே அவரது ஆட்சிக்காலத்தில் இதுபற்றி பேசவில்லை. எனவே, இது தேவையற்ற பேச்சு," என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
- Sep 08, 2025 05:39 IST
வி.சி.க மோதல்: புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது
டி.ஜி.பி அலுவலகம் முன்பு வி.சி.க-வினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மோதலில், வி.சி.க நிர்வாகி திலீபன் அளித்த புகாரின் பேரில், ஆபாசமாகப் பேசுதல், தாக்குதல் நடத்துதல் மற்றும் கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஏர்போர்ட் மூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அடையாறில் உள்ள சாஸ்திரி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அவர் எழும்பூரில் உள்ள நீதிமன்ற குடியிருப்பில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Sep 07, 2025 21:25 IST
விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து - நடிகை திரிஷா
துபாயில் நடைபெற்ற சைமா விருதுகள் நிகழ்ச்சியில் பேசிய நடிகை திரிஷா, நடிகர் விஜய்யின் புதிய அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
"விஜய்யின் கனவுகள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் நிச்சயம் நிறைவேறட்டும். அவர் அதற்கு தகுதியானவர்தான்" என்று திரிஷா கூறினார். நடிகை திரிஷாவும், விஜய்யும் 'கில்லி', 'திருப்பாச்சி' லியோ உட்பட பல வெற்றிப் படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Sep 07, 2025 21:10 IST
‘அ.தி.மு.க-வை யாராலும் உடைக்க முடியாது’ - எடப்பாடி பழனிசாமி
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க-வை நிறைய பேர் உடைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், யாராலும் கட்சியை உடைக்க முடியாது. தொண்டர்கள் துணையுடன் அதைத் தவிடுபொடி ஆக்கி வருகிறோம்” என்று கூறினார்.
- Sep 07, 2025 19:36 IST
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை - இ.பி.எஸ் வாக்குறுதி
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக பாரத ரத்னா விருது வழங்குமாறு பா.ஜ.க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.
திண்டுக்கல்லில் பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி,
முத்துராமலிங்கத் தேவர் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளைப் போற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அளித்தவர் ஜெயலலிதா என்பதையும் பழனிசாமி நினைவு கூர்ந்தார். - Sep 07, 2025 19:02 IST
எனது உயிரைக் கொடுத்து எம்.ஜி.ஆரின் புகழை காப்பேன் - ராமராஜன்
ஏதோ நடக்கிறது, ஆனால் என்ன நடக்கப் போகிறது என தெரியவில்லை. எனது உயிரைக் கொடுத்து எம்.ஜி.ஆரின் புகழை காப்பேன் என ஸ்ரீவில்லிபுத்தூரில் நடிகரும் முன்னாள் எம்.பி.,யுமான ராமராஜன் கூறியுள்ளார்
- Sep 07, 2025 19:00 IST
2026-ல் பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார் - விஜய பிரபாகரன்
2006ல் எப்படி கேப்டன் ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் போனாரோ, அதேபோல் 2026-ல் என் அம்மா பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார் என தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்
- Sep 07, 2025 17:54 IST
நகராட்சி ஆணையருக்கு எச்சரிக்கை விடுத்த உயரதிகாரி
செங்கல்பட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கியும் பணியை தொடங்காத நகராட்சி ஆணையருக்கு உயரதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 11 மாதங்கள் ஆகியும் பணியை தொடங்காதது ஏன்? என நகராட்சி ஆணையரிடம் நகராட்சி நிர்வாக இயக்குநர் கேள்வி எழுப்பினார்
- Sep 07, 2025 16:33 IST
சென்னையில் ரோடு ரோலர் விபத்தில் மாற்றுத்திறனாளி மரணம் – ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை
சென்னை, கோயம்பேட்டில் சாலை பணியின்போது ரோடு ரோலர் ஏறி மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவத்தில் சாலைப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 127-வார்டு மாநகராட்சி உதவி பொறியாளர் வீரராகவன் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஒப்பந்த விதிப்படி தற்போதைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது
- Sep 07, 2025 16:13 IST
விஜய் உடன் கூட்டணி குறித்து ஜனவரி 9-ல் அறிவிப்பு – தே.மு.தி.க விஜய பிரபாகரன்
விஜயகாந்துக்கும் விஜய்க்கும் மிகப்பெரிய நட்பு உள்ளது, அதை தான் மேடையில் வெளிப்படுத்தியுள்ளார். விஜய் உடன் கூட்டணி குறித்து ஜனவரி 9ம் தேதி தெரியவரும் என தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
- Sep 07, 2025 15:50 IST
”2026-ல் தே.மு.தி.க இணையும் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு”
"2026 தேர்தலில் தே.மு.தி.க இணையும் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். இப்போதைக்கு மக்களுக்கு மட்டுமே நாங்கள் கூட்டணி" என்று விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
- Sep 07, 2025 15:21 IST
விநாயகர் சிலை கரைப்பின்போது தண்ணீரில் மூழ்கி 4 பேர் பலி
மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது தண்ணீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் மாயமாகினர். அம்மாநிலத்தின் புனே, நந்தல் தானே ஆகிய மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் ஆறு, ஏரி, குளம், கால்வாய்களில் கரைக்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் தண்ணீர் அடித்து செல்லப்பட்டு மாயமாகினர். மாயமானவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
- Sep 07, 2025 15:19 IST
”பரந்தூர் விமானநிலைய திட்டத்திற்கு அ.தி.மு.க.வே காரணம்”
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்ததே அ.தி.மு.க.தான். அந்த திட்டத்தை தி.மு.க. தொடர்கிறது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை. குண்டர்கள் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். தலைவர்களுக்கே அச்சுறுத்தல் இருக்கும் சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிற போது சாதாரண மக்கள் எப்படி வாழ முடியும் எனத் தெரியவில்லை என்றார்.
- Sep 07, 2025 15:01 IST
இரண்டே நாட்களில் ரூ. 50 கோடியை தாண்டிய ''மதராஸி''
சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரின் கூட்டணியில் உருவான ''மதராஸி'' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
- Sep 07, 2025 14:59 IST
ஸ்டாலினுடன் ஜான் பென்னிகுயிக் குடும்பத்தினர் சந்திப்பு
முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர். நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- Sep 07, 2025 14:25 IST
ஆதரவு வழங்கிய தொண்டர்களுக்கு நன்றி - செங்கோட்டையன்
கோபி செட்டி பாளையத்தில் செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்து வரும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்றும், இன்றும் தொடர்ந்து என்னை வந்து சந்திக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். நாளை மறுநாள் முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்திக்கிறார் செங்கோட்டையன். தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- Sep 07, 2025 14:20 IST
ராஜினாமா செய்கிறார் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது இந்த முடிவு குறித்து ஜப்பான் நாட்டின் என்.ஹெச்.கே செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. 68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார்.
- Sep 07, 2025 14:00 IST
3-வது டி20 போட்டி: ஜிம்பாப்வே-இலங்கை இன்று மோதல்
ஜிம்பாப்வேக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று, தொடரை 1-1 என சமன் செய்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி இதே மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டும்.
- Sep 07, 2025 13:03 IST
டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு- நயினார் நாகேந்திரன் மறுப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறுவதற்கு நான் காரணம் அல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவுகளுக்கு நயினார் நாகேந்திரனின் தவறான அணுகுமுறையே காரணம் என்று குற்றஞ்சாட்டியிருந்தார் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
- Sep 07, 2025 12:58 IST
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
- Sep 07, 2025 12:51 IST
சத்திய பாமாவின் பதவி பறிப்பு
கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளரான சத்திய பாமாவின் கட்சிப் பதவி பறிப்பு அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிரணி செயலாளர் பொறுப்பில் இருந்து சத்திய பாமாவை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி
- Sep 07, 2025 12:48 IST
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. காம்பவுண்ட் ஆண்கள் பிரிவில் இந்தியா முதல்முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ரிஷப், பிரதமேஷ், அமன் மூவரும் பிரெஞ்சு ஜோடியை 235-233 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
- Sep 07, 2025 12:24 IST
விஜயின் சுற்றுப்பயண விவரம்
செப்.13ம் தேதி திருச்சி சத்திரம் பகுதியில் தொடங்கி அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளிலும் பிரசார பயணத்தை விஜய் மேற்கொள்ள உள்ளார். `தளபதி 2026 அரசியல் பிரசார பயணம்' என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்
- Sep 07, 2025 12:18 IST
பதவியை ராஜினாமா செய்கிறேன்: அதிமுக முன்னாள் எம்பி சத்யபாமா
செங்கோட்டையனின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்; எதற்கும் தயாராக இருக்கிறேன் என்று அதிமுக முன்னாள் எம்பி சத்யபாமா பேட்டி அளித்துள்ளார். அனைவரும் ஒன்றுபட்டு இயக்கத்துக்காக பாடுபட வேண்டும் என்பதே லட்சியம். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிர் அணிச் செயலாளராக சத்தியபாமா உள்ளார்.
- Sep 07, 2025 11:53 IST
"செங்கோட்டையனுக்கு எனது முழு ஆதரவு உண்டு" -ஓபிஎஸ்
"அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை இணைக்கும் செங்கோட்டையனின் முயற்சிக்கு எனது முழு ஆதரவு உண்டு. அவரை உறுதியாக நான் சந்திப்பேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
- Sep 07, 2025 11:16 IST
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் ராஜினாமா
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் மூலம் தலைமைக்கு அனுப்பினர். செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியதால் தங்களுக்கும் பதவி வேண்டாம் என ஆதரவாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
- Sep 07, 2025 10:50 IST
ஓய்வு பெற்ற சிஆர்பிஎப் ஆய்வாளரிடம் கைவரிசை
நாகர்கோவிலிலிருந்து ரயிலில் சென்னை வந்த ஓய்வு பெற்ற சிஆர்பிஎப் ஆய்வாளர் நாகராஜன் என்பவரின் பையில் இருந்த 49 சவரன் நகை திருட்டு என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- Sep 07, 2025 10:29 IST
ஈபிஎஸ் 5 ஆம் கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 17 முதல் 5 ஆம் கட்ட சுற்றுப்பயணம் அறிவித்துள்ளார். செப்டம்பர் 17 முதல் 26 ஆம் தேதி வரை 5 ஆம் கட்டமாக பரப்புரை மேற்கொள்ள உள்ளார். தருமபுரி, நாமக்கல், நீலகிரி, கரூர் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி 5 ஆம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- Sep 07, 2025 09:47 IST
விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது - ராஜகண்ணப்பன்
யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தலாம். அதில் பங்கேற்கும் சிறியவர்களால் ஓட்டு போட முடியாது. தனியாக நிற்கும் விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது. திடீரென வந்து அரசியல் செய்வது சாதாரணமல்ல என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
- Sep 07, 2025 09:26 IST
மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - சிறுவன் கைது
சென்னை மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 5ம் தேதி மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
- Sep 07, 2025 09:08 IST
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிராக செய்திகளை வெளியிட டெல்லி நீதிமன்றம் தடை!
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிராக செய்திகளை வெளியிட டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏற்கனவே பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அந்நிறுவனத்திற்கு எதிராக வெளியிட்ட அவதூறான கட்டுரைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- Sep 07, 2025 08:42 IST
அயலக தமிழர்களுக்கு ஏராளமான திட்டங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
அயலக தமிழர்களுக்காக ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் அயலக தமிழர் நலன் துறை உங்களுக்காக ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் அறிவில் சிறந்தவர்கள், கடும் உழைப்பாளிகள் என்பதை அயலக மண்ணில் நிரூபித்துள்ளீர்கள். லண்டனில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு என்ற இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
- Sep 07, 2025 08:15 IST
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தி.மலை, சேலம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- Sep 07, 2025 08:14 IST
பராமரிப்பு பணி - இன்று புறநகர் மின்சார ரயில்கள் ரத்து
சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூர் இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக 11 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. புறநகர் ரயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூர் மார்கெட்டிலிருந்து இன்று இரவு 7.35, 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், கும்மிடிப்பூண்டியிலிருந்து இன்று இரவு 7.35 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயில்கள் ரத்து என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
- Sep 07, 2025 08:09 IST
இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளருக்கு அசாதுதீன் ஓவைசி ஆதரவு!
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு அளிப்பதாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார்.
- Sep 07, 2025 07:49 IST
மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கவுள்ள செங்கோட்டையன்
செப்டம்பர் 9 ஆம் தேதி முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்திக்கிறார். இதில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Sep 07, 2025 07:43 IST
ஹிந்துஜா குழுமத்துடன் ரூ.7,500 கோடி ஒப்பந்தம்: தமிழக அரசு கையெழுத்து
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹிந்துஜா குழுமத்திடம் இருந்து ரூ.7,500 கோடி முதலீட்டு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார். சனிக்கிழமை கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்கான செல் மற்றும் பேட்டரி உற்பத்தி, பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஆதரிக்கும் இது 1000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
- Sep 07, 2025 07:39 IST
எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் - ஸ்டாலின்
ஜெர்மனி, இங்கிலாந்து பயணித்தில் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய பயணம்; லண்டன் மாநகரில் தமிழர்கள் வாழ்த்தில் அனுப்ப நிறைவு பெறுகிறது என ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- Sep 07, 2025 07:36 IST
சென்னையில் நேற்றிரவு கனமழை!
சென்னை, மணலி, நெற்குன்றம், கொரட்டூர், மேடவாக்கம், ஈஞ்சம்பாக்கம்,விம்கோ நகர் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மணலி புதுநகரில் அதிகபட்சமாக 9.2 செ.மீ மழைப்பதிவானது.
- Sep 07, 2025 07:35 IST
தீ விபத்தில் தேக்கு மரங்கள் சேதம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் அதிகாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன. மூன்று மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
- Sep 07, 2025 07:34 IST
செங்கடலில் பல சர்வதேச ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு!
ஐரோப்பாவை செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவுடன் இணைக்கும் பல சர்வதேச ஆழ்கடல் கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அசுரே க்ள்வுட் பிளாட்ஃபார்ம் பாதிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் சேவைகளை பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
- Sep 07, 2025 07:31 IST
இன்று இரவு சந்திர கிரகணம்
இன்று 9.47 மணி முதல் திங்கள் அதிகாலை 1.31 மணி வரை சந்திரகிரகணம் நிகழ்கிறது. சந்திரகிரகணம் நிகழ்வதை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இன்று மாலை நடை அடைக்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.