சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும ரயில் எண் 08558 சென்னை எழும்பூர் - விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் அக்டோபர் 27 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, எழும்பூருக்குப் பதிலாக டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும்.
இதேபோல், ரயில் எண் 08557 விசாகப்பட்டினம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் அக்டோபர் 26 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
ரயில் எண் 17644 காக்கிநாடா துறைமுகம் - செங்கல்பட்டு சர்கார் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 26 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு காக்கிநாடாவில் இருந்து புறப்பட்டு கொருக்குப்பேட்டை, அரக்கோணம், மேல்பாக்கம் வழியாக செங்கல்பட்டு வந்தடையும். சென்னை எழும்பூர், மாம்பலம் மற்றும் தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு வராமல் தவிர்க்கும். பயணிகளின் நலன் கருதி பெரம்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
ரயில் எண் 17652 கச்சிகுடா - செங்கல்பட்டு விரைவு ரயில் அக்டோபர் 26 ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு கச்சேகுடாவில் இருந்து புறப்பட்டு திருத்தணி, மேல்பாக்கம் வழியாக செங்கல்பட்டு வந்தடையும். அரக்கோணம், பெரம்பூர் சென்னை எழும்பூர், மாம்பலம் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட மாட்டாது.
ரயில் எண் 11017 லோகமான்ய திலக் டெர்மினஸ் (டி) - காரைக்கால் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 26 ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு லோகமான்ய திலக்கில் இருந்து புறப்பட்டு திருத்தணி, மேல்பாக்கம் வழியாக செங்கல்பட்டு வந்தடையும். அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட மாட்டாது. பயணிகளின் நலன் கருதி திருத்தணியில் நிறுத்தம் வழங்கப்படும்.
02121 மதுரை - ஜபல்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் அக்டோபர் 26 ஆம் தேதி இரவு 11.35 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்பாக்கம், அரக்கோணம், பெரம்பூர் மற்றும் கொருக்குப்பேட்டை வழியாக செல்லும். தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூரில் நிறுத்தப்பட மாட்டாது. பயணிகளின் நலன் கருதி அரக்கோணம் மற்றும் பெரம்பூரில் நிறுத்தம் வழங்கப்படும்.
அக்டோபர் 27 ஆம் தேதி நள்ளிரவு 12.55 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில் எண் 12651 மதுரை - ஹஸ்ரத் நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், செங்கல்பட்டு, மேல்பாக்கம், அரக்கோணம், பெரம்பூர் மற்றும் கொருக்குப்பேட்டை வழியாக செல்லும். தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூரில் நிறுத்தப்பட மாட்டாது. பயணிகளின் நலனுக்காக பெரம்பூரில் நிறுத்தம் வழங்கப்படும்.
ரயில் எண் 09420 திருச்சிராப்பள்ளி - அகமதாபாத் சிறப்பு ரயில் அக்டோபர் 27 அன்று காலை 05.40 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து செங்கல்பட்டு, மேல்பாக்கம் மற்றும் திருத்தணி வழியாக செல்லும். தாம்பரம், சென்னை எழும்பூர், பெரம்பூர் மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட மாட்டாது. பயணிகளின் நலன் கருதி திருத்தணியில் நிறுத்தம் வழங்கப்படும்.
அக்டோபர் 27ஆம் தேதி மாலை 3.35 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில் எண் 17651 செங்கல்பட்டில் இருந்து மாலை 4.35 மணிக்கு (1 மணி நேரம் தாமதமாக) புறப்படும். ரயில் எண் 17643 செங்கல்பட்டு - காக்கிநாடா போர்ட் சர்கார் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 27 அன்று மாலை 4.00 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு 17.00 மணிக்கு (1 மணி நேரம் தாமதமாக) செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.
பீச் ஸ்டேசனுக்கு பதில் பூங்காவில் இருந்து ரயில்கள் இயக்கம்
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் நாளை காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5 மணி முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு 23 சிறப்பு ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதே போல, சென்னை பூங்காவில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் தாம்பரத்திற்கு இயக்கப்படும்.
இதே போல, செங்கல்பட்டில் இருந்து காலை 4 மணியில் இருந்து 30 நிமிட இடைவெளியில் பூங்கா ரயில் நிலையத்திற்கு 25 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து காலை 3.55 மணியில் இருந்து 30 நிமிட இடைவெளியில் சென்னை பூங்கா ரயில் நிலையத்திற்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.