சென்னை பனகல் பார்க் பகுதியில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் இன்று முதல் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
பனகல் பார்க் மெட்ரோ ரெயில் நிலையத்தின் நுழைவு/வெளியேறும் அமைப்புக்குண்டான கட்டுமான பணிகள் வெங்கடநாராயண சாலை மற்றும் சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் அருகில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் இன்று முதல் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக வெங்கடநாராயண சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாக வெங்கடநாராயண சாலைக்கு செல்லலாம் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மக்களின் வசதிக்காக வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் வரை இரு திசைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“