வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புதுறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது லட்ச ஒழிப்பு துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். புதுகோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விஜய பாஸ்கருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபப்ட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் “ விஜய பாஸ்கர் மற்றும் அவரது மனைவி வி.ரம்யா ஆகியோரின் வங்கி கணக்கு, அவர்கள் நடத்தும் நிறுவனங்களான என்/எஸ் ராசி புளூ மெட்டல், ராசி எண்டர்பிரைஸ் உள்ளிட்ட அனைத்து வகையான நிறுவனங்களின் சொத்துக்களை கணக்கிட்டு பார்க்கும்போது ரூ. 35.79 கோடி உள்ளது. இது அவர்களின் வருமானத்திற்கு அதிகமான சொத்தாகும். மேலும் இது தொடர்பாக எந்த விளக்கத்தையும் இருவரும் கொடுக்கவில்லை “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது கடந்த 2021, அக்டோபர் 17ம் தேதி, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததால் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. அப்போது சொத்து மதிப்பு, ரூ. 27.22 கோடி ஆக இருந்தது.
2021, அக்டோபர் 18ம் தேதி, லஞ்ச ஒழிப்பு துறையினர் விஜய பாஸ்கர் வீடு, இலுப்பூர், புதுக்கோட்டை, மேட்டுசாலையில் உள்ள மதர் தெரசா கல்வி நிறுவனம், மேலும் விஜய பாஸ்கரின் உதவியாளர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் சுமார் 56 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“