மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கியூபா புரட்சியாளர் எர்னெஸ்டோ சேகுவேராவின் மகள் அலைடா குவேரா 2 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை சென்னை வந்தார்.
உலக அளவில் புரட்சியாளராக கொண்டாடப்படும் எர்னெஸ்டோ சேகுவேரா. அர்ஜெண்டினாவில் பிறந்த இவர். கியூபாவில் ஏற்பட்ட புரட்சியின் முகமாக அறியப்படுகிறார். முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக புரட்சி செய்த சேகுவேரா, கியூபாவின் தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
சேகுவேரா மறைந்த பிறகும், உலகம் முழுவதும் அவர் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சி பிம்பமாக இருக்கிறார்.
இந்நிலையில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கியூபா புரட்சியாளர் எர்னெஸ்டோ சேகுவேராவின் மகள் அலீடா குவேரா இரண்டு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை சென்னை வந்தார்.
சேகுவேரா மகள் அலைடா குவேரா, பேத்தி எஸ்டெபானி குவேரா ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த நிர்வாகி ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், சாமுவேல் ராஜ், மாவட்ட செயலாளர்கள் சுந்தரராஜன், வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு சேகுவேராவின் மகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சென்னையில் நடைபெறும் சி.பி.எம் பொது நிகழ்ச்சியில் தி.மு.க எம்.பி கனிமொழி, வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் அலைடாவின் மகள் எஸ்டெபானி குவேராவும் கௌரவிக்கப்படவுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”