தொடர் மழையால் நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி.. மக்களுக்கு முக்கிய தகவலை சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!

ஏரியில் நீர் நிறைந்து காணப்படுவதால் அடுத்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

chembarambakkam lake tamil news
chembarambakkam lake tamil news

chembarambakkam lake tamil news : சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம், உயர்ந்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி. ஆனால் ஏரியின் பாதுகாப்பு கருதி 21 அடியை தொட்டவுடன் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவது வழக்கம்.தற்போது தொடர் மழை மற்றும் கிருஷ்ணா நதிநீரின் வருகையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.13 அடியாக உயர்ந்துள்ளது. ஏரியில் தற்போது உள்ள நீரின் கொள்ளளவு 2,636 மில்லியன் கன அடியாகவும், ஏரிக்கு நீர் வரத்து 390 கனஅடியாகவும் உள்ளது.

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி எந்த நேரத்திலும் நிரம்பலாம் என்பதால் தொடர்ந்து ஏரியை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அடிக்கடி ஏரியின் நீர்மட்டத்தையும் அளவீடு செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் ஏரிக்கு செல்லும் அனைத்து இரும்பு கதவுகளும் பூட்டப்பட்டுள்ளது. சிலர் ஆர்வம் மிகுதியால் அதனையும் தாண்டி நிரம்பி உள்ள ஏரியை பார்த்துவிட்டு செல்கின்றனர். போலீசாரும் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி நள்ளிரவில் திறந்துவிடப்பட்டது. அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தவிர்க்க, ஏரியின் நீர்மட்டம் உயர உயர, அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரி குறித்த செய்திகள் மற்றும் பீதிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, “செம்பரபாக்கத்தின் பயம் முற்றிலும் தேவையற்றது. 1 டி.எம்.சி குஷன் உள்ளது அடுத்த 2 நாட்களில் அது நிரம்பியிருந்தாலும் கூட, அது நடக்க வாய்ப்பில்லை, இப்போதே வெள்ளம் குறித்த பயம் வேண்டாம்

செம்பரபாக்கம் கடந்த காலங்களில் என்.இ.எம்மில் பல ஆண்டுகளில் நிரப்பப்படுவதையும், வெள்ளம் இல்லாமல் நீர் வெளியேற்றப்படுவதையும் நாங்கள் கண்டுள்ளோம். அடையார் நதி அதிகபட்ச வெள்ள மட்டத்திற்கு (எம்.எஃப்.எல்) அந்த எம்.எஃப்.எல் உடைந்தால் மட்டுமே, வெள்ளத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும், எனவே தயவுசெய்து இப்போது பயப்பட வேண்டாம். இது குறித்த எனது வார்த்தைகளை நீங்கள் நம்பலாம்.

2015 ஆம் ஆண்டு நடந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒவ்வொரு நிகழ்வையும் 2015 வெள்ளத்துடன் ஒப்பிட வேண்டியதில்லை. எனவே நிம்மதியாக தூங்குங்கள். இந்த மழை பாதிப்பில்லாதது”

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chembarambakkam lake tamil news chembarambakkam news chennai weather man

Next Story
News Highlights: கனமழை… சென்னையில் அடையாறு கரையோரப் பகுதிகளை கண்காணிக்க உத்தரவு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com