சென்னை உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மதியம் 12 மணி முதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே மாண்டஸ் புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழையாலும், நீர்வரத்தாலும் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீா்மட்ட உயரம் 24 அடியாக உள்ளது.
இந்நிலையில் மழையால் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருவதால், நண்பகல் 12 மணிக்கு ஏரியிலிருந்து தண்ணீர் திறப்படுக்கிறது. வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது டிச.7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இதனால் அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.