Advertisment

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Chembarambakkam 1

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மிக்ஜாம் புயல் காரணமக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் சென்னைக்கு அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு பகல் 12.30 மணியில் இருந்து 6000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை குறிப்பிட்ட அளவில் பகிர்ந்து 6000 கன அடி உபரி நீரை வெளியேற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையைச் சுற்றியுள்ள நீர்தேக்கங்களில் 98% நிரம்பிவிட்டதால் நீர் திறப்பு குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் நீர்வளத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னையைச் சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி உள்ளிட்ட 6 நீர்தேக்கங்களின் 98 சதவீதம் நீர் நிரம்பிவிட்டதாக நீர்வளத் துறை கூடுதல் செயலர் தெரிவித்துள்ளார். மேலும், நீர் திறப்பு தொடர்பாக மக்களுக்கு தொலைபேசி குறுந்தகவல் மூலம் தகவல் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் தொடர் கன மழை பெய்து வருவதால், சென்னை அடையாற்றில் ஏற்பட்டுள்ளது.  அடையாறில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜாஃபர்கான்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மிக்ஜாம் புயல் டிசம்பர் 50-ம் தேதி முற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளையும் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர் கனமழை தொடர்வதால் பொதுமக்கள் முடிந்தவரை வீட்டிலேயே பத்திரமாக இருக்கும்படி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை மட்டுமே 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அரசு முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருக்கிறது” என்றார்.

சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் நாளை நடக்க இருந்த செம்ஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் கல்வி நிலையங்கள், நிதி நிறுவனங்கள்,வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி புரிய கேட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chembarambakkam Lake
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment