Advertisment

அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை: நிவாரண முகாம்கள், உதவி எண்கள் அறிவிப்பு

Chennai Cyclone Cooking / Relief centres: சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள் தற்போது திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

author-image
WebDesk
New Update
அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை: நிவாரண முகாம்கள், உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று திறக்கப்பட்டது.  ஏரியின்‌ மிகை நீர்‌ அடையாறு ஆற்றின் வழியே கடலில் கலப்பாதால் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

Advertisment

 

 

 

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சென்னை‌ குடிநீர்‌ வழங்கும்‌ முக்கிய நீர்‌ ஆதாரங்களில்‌ ஒன்றான செம்பரம்பாக்கம்‌ ஏரியின் மொத்த உயரமான ‌ 24 அடியில் இன்று (நவம்பர், 25 ) 22 அடியை நெருங்குவதால், ஏரியில் இருந்து பொதுப்பனித் துறை உபரி நீரை இன்று மதியம் 12 மணியளவில் ஆயிரம் கனஅடி அளவிற்கு திறக்கப்படுகிறது. இது நீர்வரத்திற்கு ஏற்ப படிப்படியாக உயர்த்தப்படும் என பொதுப்பனித்துறை அறிவிவித்துளது

 

‌ஏரியின்‌ நீர்மட்டம்‌ 22.00 அடியாக உயரும்போது, அணையின்‌ வெள்ள உபரிநீர்‌ வெளியேற்றும்‌ ஒழுங்குமுறை வழிகாட்டுதலின்படி அணைக்கு வரும்‌ நீர்‌ வரத்து அவ்வாறே வெளியேற்றப்பட

வேண்டும்‌.

எனவே, செம்பரம்பாக்கம்‌ ஏரியின்‌ மிகை நீர்‌ அடையாறு ஆற்றின் வழியே கடலில் கலப்பாதால் ஆற்றின் இருமருங்கிலும் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள குறிப்பாக மண்டலம் 10, 11 , 12 மற்றும் 13ல் உள்ள காணு நகர் , சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, கோட்டுர்புரம், ஜாபர் கான் பேட்டை, சித்ரா நகர் ,  மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள் தற்போது திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

கட்டுப்பாட்டு அறை எண்கள் :

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகள் கட்டுப்பாடு அறை

உதவி எண் . 044- 25384530, 044- 25384540

தொலைபேசி எண் - 1913

மண்டலம் - 10 - 9445190210,  மண்டலம் - 11 - 9445190211

மண்டலம்- 12 - 9445190212, மண்டலம் - 13 - 9445190213

என்று மாநகராட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று நண்பகல் நிலவரப்படி கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயல் அடுத்த ஆறு மணி நேர்த்தில் அதி தீவிர புயலாக மாறி, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரையைக் கடக்கும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணைத்தலைமை இயக்குநர் பாலச்சந்திரன் சற்று முன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tamilnadu Nivar Cyclone Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment