scorecardresearch

செம்பரம்பாக்கம் பராமரிப்பு பணி: சென்னையில் 14-ம் தேதி இந்த ஏரியாக்களில் குடிநீர் வினியோகம் தடை

குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பு தண்ணீர் டேங்கர்களை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கம் பராமரிப்பு பணி: சென்னையில் 14-ம் தேதி இந்த ஏரியாக்களில் குடிநீர் வினியோகம் தடை

சென்னையில் பிப்ரவரி 14ஆம் தேதியன்று 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பு தண்ணீர் டேங்கர்களை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் ஷட்டர்களில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னையின் பல பகுதிகளில் குழாய் நீர் விநியோகம் பிப்ரவரி 14-ம் தேதி தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை குழாய் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என்று நீர்வளத்துறை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணாநகர், ஆலந்தூர், கோடம்பாக்கம், அம்பத்தூர் மற்றும் வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் வழங்கப்படாது என சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பு தண்ணீர் டேங்கர்களை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

குடியிருப்பாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னை மெட்ரோ வாட்டர் இணையதளத்தில் உள்ள ‘டயல் ஃபார் வாட்டர்’ சேவையைப் பயன்படுத்தி டேங்கர் நீர் விநியோகத்தையும் முன்பதிவு செய்யலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chemparampakkam water supply announcement on february 14th 2023

Best of Express